உயிர் காத்த ஊடகவியலாளர்கள்! “காலத்தினால் செய்த நன்றிக்கு பாராட்டுகள்” தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி!
சென்னை : சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட போது பணிக்கு இடையேயும் பல உயிர்களை ஊடகவியலாளர்கள் காப்பற்றிய நிலையில், காலத்தினால் செய்த நன்றிக்கு பாராட்டுகள் என தமிழக தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை நகரின் மிக முக்கியமான பகுதியான சென்ட்ரல் பகுதியில் ராஜீவ்காந்தி அரசு பொது தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது.
சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை
தினமும் புற நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் பணி மகத்தானது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில், முக கவசம், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

திடீர் தீ விபத்து
மளமளவென பரவி தீ அருகிலிருந்த கல்லீரல் சிகிச்சை பிரிவில் பற்றிய நிலையில், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் சிலர் அங்கிருந்து வெளிய வர முடியாமல் மாட்டிக் கொண்டனர். தீ விபத்து ஏற்பட்டது குறித்து அருகிலிருந்தோர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், தீ விபத்து நடந்த பகுதிக்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உயிர்காத்த ஊடகவியலாளர்கள்
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் தீ விபத்து நடந்த இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு ஊடகங்களில் இருந்து செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் அங்கு குவிந்தனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் சிக்கி இருப்பதை கண்ட செய்தியாளர்கள் அவர்களை தங்கள் தோள்களில் தூக்கிச் மீட்டனர்.
Recommended Video

முதல்வர் பாராட்டு
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஊடகவியலாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஊடகவியலாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார் . இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு - நேரத்தின் அருமை உணர்ந்து - பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications