"தென்னகத்து போஸ்" ஜெயந்தி விழாவில் முத்துராமலிங்கத் தேவரை நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் அக்டோபர் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் இன்று அக்டோபர் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெற்று வருகிறது.

தேவர் ஜெயந்தி
இதனின் தொடர்ச்சியாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 9 மணி முதலே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தமிழக அரசு சார்பில் மரியாதை
இந்நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, மூர்த்தி,ஐ. பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும் திரளாக பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் "தென்னகத்து போஸ்" என முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,""கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

"தென்னகத்து போஸ்"
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவராக இருந்த போதே மு.க.ஸ்டாலின் பலமுறை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications