கலைப்புலி தாணுவுக்கு இவ்வளவு பெரிய பேரனா? வீட்டு விசேஷத்தில் குவிந்த பிரபலங்கள்! ரொம்ப சந்தோசம்
சென்னை: பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் பேரன் திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தயாரிப்பாளராக வலம் வருபவர் தாணு. கலைப்புலி எஸ் தாணு என அவரை அழைப்பார்கள். ரஜினி நடித்த கபாலி உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் தயாரித்திருக்கிறார் .
இந்த நிலையில் அவரது வீட்டில் தான் விசேஷம் நடந்திருக்கிறது.
கலைப்புலி எஸ்.தாணுவின் பேரன் ஆதித்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

ஆதித்யா கலைப்புலி தாணுவின் நிறுவனத்தை கவனித்து வரும் நிலையில் மருத்துவரான பிரித்திகாவுக்கும் அவருக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து வரவேற்பு நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், டி.ராஜேந்தர், பிரபு, ராம்குமார், ரம்பா, ஐசரி கணேஷ், மீனா, ஷோபா கல்பாத்தி அகோரம் உள்ளிட்டோர் வாழ்த்தினார்.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார், சூர்யா, நாசர், எஸ்ஜே சூர்யா, பாக்கியராஜ், தியாகராஜன், பிரசாந்த், சாந்தனு, சிபிராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

தொடர்ந்து இயக்குனர்கள் வெற்றிமாறன், பாலா, நடிகர் ஆனந்தராஜ், இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications