வந்தாச்சு மெசேஜ்.. முதல்வர் காப்பீடு திட்டம்.. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இந்த திட்டமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிகிச்சை முறைகள்: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சுமார் 1.44 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 52 பரிசோதனை முறைகளுக்கும், இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் இதுவரை வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. மொத்தத்தில், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருமே, பயன் பெறத்தக்க வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
காப்பீடு திட்டம்: இத்திட்டத்தின்படி ஒரு குடும்பம், ஒரு வருடத்துக்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்பது கூடுதல் அம்சமாக உள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்..
காரணம், பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையையே இன்னமும் வைத்திருக்கிறார்கள்.. அந்த அட்டை இப்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்களும் கலந்துகொண்டு பயனடையலாம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டிருந்தார்.
சிறப்பு முகாம்: ஆனால், நாளை 18ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்.. எனவே, வருகிற டிசம்பர் 2-ம் தேதிக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பலன்பெறலாம் என்றம் சுகாதாரத் துறை தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications