லீகல் டீமை கூப்பிடுங்க.. உடனே நடவடிக்கை எடுங்க.. ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட்.. இறையன்பு அதிரடி ஆர்டர்
சென்னை: ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட் இன்று வெளியானது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்தது.
கடந்த மாதம் விசாரணை முடிந்த நிலையில் அந்த ரிப்போர்ட் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிப்போர்ட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சசிகலா
இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது. சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும். சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இறையன்பு
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் இந்த ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

என்ன உத்தரவு
இந்த ஆணைய அறிக்கை தற்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை செயலாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்விற்கு பின் சட்ட வல்லுனர்களுடன் கருத்து கேட்கப்பட்டு ஆலோசனை செய்யப்படும். அதன்பின் சட்ட ரீதியான நடவடிக்கைகள், கிரிமினல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

என்ன உள்ளது?
இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர். ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லைபிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications