ரெஸ்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஓய்வு நாளிலும் ஆய்வு! நாட்டுமரக் கன்று நடச்சொன்ன இறையன்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு நாளான இன்று ஆய்வு நடத்தி தனக்கு ரெஸ்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உணர்த்தியுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் விடுமுறை நாட்களிலும் வீட்டில் தங்காமல் கள ஆய்வுக்கு புறப்பட்டு விடுகிறார் இறையன்பு.

இது போன்று அதிகாரிகள் ஒவ்வொருவரும் கள ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விருப்பமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Secretary Iraianbu IAS made it inspection today at all memorials in chennai

செய்தித் துறையின் கீழ் உள்ள சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள இராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு பொலிவுட்டப் பட்டது, மார்பளவுச் சிலை உள்ளிட்டவைகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பார்வையிட்டார்.

தொடர்ந்து சுதந்திரப் போரட்ட வீரர்கள் அரங்கம், தமிழ்மொழித் தியாகிகள் அரங்கம், பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்தி மண்டப வளாகத்தில் அதிக அளவில் நமது மண்ணிற்கேற்ற நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யுமாறு அறிவுத்தினார்.

Chief Secretary Iraianbu IAS made it inspection today at all memorials in chennai

பின்னர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பொது மக்கள் அதிக அளவில் பார்வையிட்டு செல்லும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ மாணவியர்கள் இதுபோன்ற அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யவும் செய்தித் துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்மென்றும் பொதுப்பணித் துறை அலுவலர்களை தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு IAS கேட்டுக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+