பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி.. காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் குமார் தாக்கப்பட்டுள்ளார்.. ஐகோர்ட்
மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும், காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று பதில் அளித்த நீதிபதிகள், சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கை யாரும் மறந்திட முடியாது என்றும், பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாய் கொடுத்த புகாரில் கூட இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கை தாமாக முன்வந்து ஐகோர்ட் கிளை விசாரணைக்கு எடுத்தது. நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நீதிபதிகள் இன்றும் காவல்துறை, அரசின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அஜித்குமார் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. சில சாட்சிகள் அழிக்கப்பட்டு இருக்கிறது தெரிகிறது. அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது.
கொலையாளி கூட
காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை. ஆனால் காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? வாய் மற்றும் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள்.
கொலையாளி கூட இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்க மாட்டார். காது மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் குமார் தாக்கப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று பதில் அளித்த நீதிபதிகள், சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கை யாரும் மறந்திட முடியாது என்று கூறினர்.
இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு
பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாய் கொடுத்த புகாரில் கூட இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் முதற்கொண்டு இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவல்துறை தான் மக்களுக்கு பாதுகாப்பு, அந்த காவல்துறையே இப்படி செய்யலாமா?.. இனி இது போன்று போலீசார் யாரும் நடக்கக் கூடாது.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 8 ஆம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக சிபிஐக்கு வழக்கை மாற்றம் செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications