1000 அணு ஆயுதங்களை உருவாக்கும் சீனா.. கவனம்.. இந்தியாவிற்கு மிகப்பெரிய வார்னிங் தந்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா சீனா மோதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) வெளியிட்ட புதிய உளவு அறிக்கைதான் இன்று அதிகாலை முதலே தேசிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. இதில் இந்தியாவிற்கு சில கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன.

சீனா தனது ராணுவத்தை அதிநவீனமாக்கி வருகிறது. மற்ற நாடுகளை விட இதில் சீனா வேகமாக இருக்கிறது. ராணுவ நவீனமயமாக்கலை விரைவாக முன்னேற்றி வருகிறது. அனைத்து போர் களங்களிலும் திறன்களை வளர்த்து வருகிறது. ஒரு துறை என்று இல்லாமல் போர் தொடர்பான அனைத்து துறைகளிலும் சீனா வேகம் காட்டி வருகிறது.

சீனாவின் இந்த பலம் அவர்களுக்கு தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற உதவும். விரைவில் அது நடக்கலாம். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 1,000 செயல்பாட்டு அணு ஆயுதங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளதை விட பலமடங்கு.. அதாவது 1000+ அணு ஆயுதங்களை உருவாக்க சீனா தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. இந்தியா தனது எல்லை பாதுகாப்பில் கவனமாக சிரத்தையுடன் இருக்க வேண்டும்.

China is making 1000-plus nuclear weapons amid India has only 100 plus says USA
Photo Credit: Wise AI generated

இந்தியாவிடம் 100+ அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவை விட 10 மடங்கு அணு ஆயுதங்களை அதிகம் உருவாக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தானை இரண்டாம் கட்ட எதிரியாக, துணை பிரச்சனையாக, தீர்க்க கூடிய பிரச்சனையாகவே பார்க்கிறது. அவ்வப்போது பாகிஸ்தான் ஆதரவில் இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் பெரிய பிரச்சனை கிடையாது. அது தீர்க்க கூடிய பிரச்சனைதான்.

ஆனால் இந்தியாவிற்கு உண்மையான பிரச்சனையே சீனாதான். சீனாவை இந்தியா தனது முதல் எதிரியாக கருதுகிறது, என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) அறிக்கை தெரிவிக்கிறது.

தைவானை சீனாவுடன் இணைப்பது, ஆசியாவின் பவர் புல் நாடாக உருவெடுத்து, அமெரிக்காவின் உலக சாம்ராஜ்ஜியத்தை கையகப்படுத்துவது , சீனாவின் ராணுவத்தை உலகின் நம்பர் 1 ஆக மாற்றுவது ஆகிய குறிக்கோளுடன் அந்த நாடு செயல்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் விரைவாக அதிகரிக்கும் திறன் கொண்டவை. சீனாவைத்தான் இந்தியா இதனால் பெரிய எதிரியாக பார்க்கிறது. சீனா இந்த பிராந்தியத்தில் பெரிய அண்ணன் போல இருப்பதால் இந்தியாவிற்கு தடங்கல்கள் ஏற்படுகின்றன. இந்தியாவும் இதற்கு சளைக்கவில்லை. இந்தியாவும் தனது ராணுவத்தை பலமாக்கி வருகிறது. இந்தியா சீனாவிற்கு போட்டியாக உருவெடுத்து வருகிறது.

முக்கியமாக உற்பத்தி துறையில் இந்தியா புதிய உச்சத்தை அடையும் நிலையில் உள்ளது. இது சீனாவிற்கு சவாலாக இருக்கும். 2020ல் நடந்தது போல எல்லை மோதல் சீனா - இந்தியா இடையே ஏற்படலாம். இப்போது சண்டை ஓய்ந்து இருந்தாலும் மோதல் உள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையே அந்த புகைச்சல் இன்னும் போகவில்லை. அது இப்போதைக்கு போகாது.

சீனாவிற்கு கூடுதல் போர் உதவிகளை, ராஜதந்திர ரீதியான ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்க சீனா முடிவு செய்துள்ளது. முக்கியமாக பாதுகாப்பு, ராணுவ ரீதியாக செயற்கைகோள் தகவல்களை பயன்படுத்திக்கொள்ள சீனா பாகிஸ்தானுக்கு கூடுதல் சலுகைகள், அனுமதிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவை எதிர்க்கும் விதமாகவே பாகிஸ்தான் இப்படி எல்லாம் செய்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) வெளியிட்ட புதிய உளவு அறிக்கை தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+