மகாபலிபுரம், சென்னை, கோவளம்.. காரிலேயே சுற்றி பார்க்க போகும் சீன அதிபர்
Recommended Video
சென்னை: நாளை காரிலேயே சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர்.. மீண்டும் காரிலேயே சென்னை வந்து ..மீண்டும் காரிலேயே கோவளம் போகிறார்.. மீண்டும் காரிலேயே சென்னை திரும்புகிறார். அப்படி சென்னையை முழுமையாக சுற்றிப்பார்த்தபடி சீன அதிபர் இரண்டு நாள் காரில் பயணம் மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதன் காரணமாவே நாளை மற்றும் நாளை மறு நாள் சென்னையில் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, ஒஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்த இன்று நாள் பயணமாக நாளை மதியம் சென்னை வருகிறார். இதேபோல பிரதமர் மோடியும் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இரு நாட்டு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது தொடர்பான விவரங்களை இப்போது முழுமையாக பார்க்கலாம்.

கோவளம் ஓட்டலுக்கு போகிறார்
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார். இதற்காக அங்கு ‘ஹெலிபேட்' தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் கார் மூலம் கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்' நட்சத்திர ஓட்டலுக்கு பிரதமர் மோடி போகிறார்.

கிண்டி ஓட்டலுக்கு போகிறார்
அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறார்.

மோடி வரவேற்கிறார்
பின்னர் மாலை 4 மணிக்கு கிண்டியில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றடைகிறார். அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

இரவில் அங்கேயே உணவு
பின்னர் அவர்கள் இருவரும் சிற்பங்களை பார்த்து ரசித்தபடி, நடந்து சென்றபடி பேசுவார்கள். அப்போது அவர்கள் கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறையையும் பார்வையிடுகிறார்கள். பின்னர் கார் மூலம் இருவரும் ஐந்துரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்க உள்ளார்கள். அங்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதனை இரு நாட்டு தலைவர்களும் பார்வையிடுகிறார்கள். அங்கேயே இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கிண்டி திரும்பும் சீன அதிபர்
பின்னர் சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து கார் மூலம் கிண்டி ஐ.டி.சி. கிரண்ட் சோழா ஓட்டலுக்கு மீண்டும் வருகிறநார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்' ஓட்டலுக்கு செல்கிறார்.

9.50 மணிக்கு கோவளம்
கிண்டி நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கும் சீன அதிபர் ஜின்பிங் 12-ந்தேதி சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருக்கும் ஓட்டலை நோக்கி புறப்படுகிறார் காலை 9.50 மணிக்கு அவர் ஓட்டலை அடைகிறார்.

மோடியுடன் பேச்சுவார்த்தை
அங்கு போய்ச் சேர்ந்ததும் அவரும் மோடியும் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் காலை 10 மணி முதல் 10.40 மணி வரை தேனீர் அருந்தியவாறு தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.

காரிலேயே மீண்டும் பயணம்
பின்னர் 10.50 மணி முதல் 11.40 மணி வரை அந்த ஓட்டலில் உள்ள மற்றொரு அறையில் இருவரின் தலைமையில் இருநாட்டு உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.. இதனைதொடர்ந்து 2 பேரும் பேசிக்கொண்டே மதிய உணவு அருந்துகிறார்கள். அதன்பிறகு ஜின்பிங் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மதியம் 12.45 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு 1.25 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து அவர் தனிவிமானம் மூலம் 1.35 மணிக்கு நேபாளம் புறப்பட்டு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் மதியம் 2 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

15ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
இரு நாட்டு தலைவர்களின் வருகைக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் காரிலேயே பயணத்தை மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன..
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications