இதுதான் சரியான வழி.. சீனாவிற்கு தக்க பாடம் புகட்டுவது எப்படி.. ஒன்இந்தியா வாசகர்கள் அசத்தல் ஐடியா!
சென்னை: இந்தியாவை தொடர்ந்து சீண்டி வரும் சீனாவிற்கு தக்க பாடம் கற்பிப்பது எப்படி என்று ஒன்இந்தியா வாசகர்கள் அசத்தலான ஐடியாக்களை கொடுத்து இருக்கிறார்கள்.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடும் மோதல் நிலவி வருகிறது. எல்லையில் நடக்கும் இந்த சண்டையில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. தொடர் பேச்சுவார்த்தைகளில் எல்லாம் சீனா தொடர்ந்து திமிராக அமைதிக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் சீனாவுக்கு எப்படி பாடம் புகட்டலாம்.. என்ன செய்தால் சீனா வழிக்கு வரும் என்று ஒன்இந்தியா வாசகர்களிடம் கருத்து கேட்டு இருந்தோம். இதற்கு வாசகர்கள் எக்கச்சக்கமான ஐடியாக்களை அனுப்பி இருந்தனர். பல ஐடியாக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அது என்ன மாதிரியான திட்டங்கள், அறிவுரைகள் என்று இங்கு பார்க்கலாம்.

ஆதரவு நாடுகளைத் திரட்டலாம்
ஒன்இந்தியா வாசகர் செல்வகணபதி தெரிவித்துள்ள ஐடியாவின் படி, சீனாவை ஒடுக்க சீனா அத்துமீறி கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் திபெத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். ஐநாவின் உதவியோடு இதை செய்ய வேண்டும். அதேபோல் சீனா ஆக்கிரமித்து இருக்கும் ஹாங்காங், மற்றும் வியட்நாம் பகுதிகளிலும் இதேபோல் செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் சீனா தென் சீன கடல் எல்லையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை ராஜாங்க ரீதியாக நமக்கு ஆதரவாக மாற்ற வேண்டும்.

பொருள் புறக்கணிப்பு செய்யலாம்
அதேபோல் சீனாவிற்கு எதிராக மோதலில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சீனாவிற்கு எதிராக திருப்ப வேண்டும், என்று கூறியுள்ளார்.இன்னொரு வாசகர் கோபாலகிருஷ்னன் சீனாவின் பொருட்களை மொத்தமாக புறக்கணிக்க வேண்டும். சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்ய கூடாது. சீனாவின் செயலிகளை பயன்படுத்த கூடாது. சீனாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம். இதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கும். சீனாவிற்கு நம்நாட்டு இளைஞர்கள் படிக்க செல்ல கூடாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்போம்
வாசகர் சை.புருஷோத்தமன் கொடுத்துள்ள ஐடியாவில், சீனாவின் பொருளாதாரம் இந்தியாவையே நம்பி உள்ளது. எனவே நாம் இனி இந்திய உற்பத்தி பொருட்களை பயன்படுத்த வேண்டும். முதலில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். சிறு குறு தொழில்களுக்கு அதிக வங்கி கடன் வழங்க வேண்டும். போதிய அளவு மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். உற்பத்தியை அதிகபடுத்திகொண்டு சீனா இறக்குமதியை படி படியாக குறைக்க வேண்டும்.

உளவியல் உத்தி
உளவியல் போர் தொடுப்பதே சீனாவின் வேலையாகும். அவர்களையும் நாம் உளவியல் மூலமாகவே எதிர்கொள்ள வேண்டும். அதாவது இந்திய எல்லையில் இந்தியாவும் படை பலத்தை அதிக படுத்தி பின்பு தான் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இவ்வாறு செய்தால் சீனா இனி இந்தியாவிடம் வால் ஆட்டாது என்று கூறியுள்ளார். அதேபோல் வாசகர் எஸ். முத்துக்குமரன் இதேபோல் சீனாவின் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சி
இன்னொரு வாசகர் வைதீசன் எம் தெரிவிக்கையில், எல்லோரும் நினைப்பார்கள் சீனா நமக்கு ஏற்றுமதி பண்ணும் சில பொருட்களை தடை செய்தால் அவர்கள் வழிக்கு வருவார்கள் என்று. அது மட்டும் இல்லாமல், அவர்கள் ஏற்றுமதி செய்யும் சில உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள் மேம்பாடு பொருட்களை நாம் உலக அளவில் export செய்ய ஆரம்பித்து அப்படியே அவர்களின் மார்க்கெட்டை பிடித்தால் போதும். இதற்கு சில காலம் கூட ஆகலாம். செய்தால் அவர்களின் அடி வயிற்றில் அடித்தது போல் இருக்கும். மற்றும் Infrastructure development செய்தாலே போதும். மற்ற நாடுகள் இங்கே தொழில் தொடங்க அதிகம் முன்வருவார்கள். இதுவும் இன்னும் அவர்களின் உலக மார்க்கெட்டை பிடிக்க உதவும், என்று அவர் கூறியுள்ளார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications