விடிவுகாலம்.. சென்னைக்கு குட்நியூஸ்.. வருகிறது சீனாவின் பெரிய முதலீடு.. இது மட்டும் நடந்தா சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் சென்னை மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலையை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் திரு. என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இருந்தனர். இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இந்த சந்திப்பு பெரிதாக பலன் அளிக்கவில்லை.

டாடா நிறுவனம்

டாடா நிறுவனம்

இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்த தொழிற்சாலையை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிஒய்டி

பிஒய்டி

பிஒய்டி சீனாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் தொழிசாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது போர்ட் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறதாம். இந்தியாவில் அவர்கள் விற்பனையை விரிவுபடுத்த உள்ள நிலையில், போர்ட் தொழிற்சாலையை வாங்க ஆலோசனை செய்து வருகிறார்களாம். அப்படி அந்த நிறுவனம் வரும் பட்சத்தில் அது தமிழ்நாட்டிற்கும், சென்னைக்கும் மிகப்பெரிய குட் நியுஸாக இருக்கும். ஆனால் இது சீன நிறுவனம் என்பதால் சில அனுமதிகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

முதலீடுகள்

முதலீடுகள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா காரணமாக லாக்டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

பொருளாதாரம்

பொருளாதாரம்

2031ல் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடையும் இலக்குடன் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது. முக்கியமாக தொழிற்துறையில் மட்டும் 23 லட்சம் கோடியை முதலீடாக பெறும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இது மொத்தம் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாடு தற்போது வாகனங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட இரசாயனங்கள், மின்னணுவியல், இயந்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது. முக்கியமாக ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+