காலரா ஏன் ஆபத்தானது? முக்கிய அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறை என்னென்ன!முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன
சென்னை: மழைக் காலத்தில் காலரா பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.
Recommended Video
கொரோனா பாதிப்பே பெரும் போராட்டத்திற்குப் பின்னர், இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், பல இடங்களில் காலரா பரவ தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலரா பாதிப்பு காரணமாக நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. மழைக் காலத்தில் தமிழகத்திலும் காலரா பாதிப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.

காரைக்கால்
காரைக்கால் பகுதியில் காலரா பரவல் காரணமாக பொதுச் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலருக்குக் காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது ஆரோ நீரைக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகளிலும் கொதிக்க வைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலரா
காலரா என்பது ஒரு பாக்டீரியா நோயாகும். இது பொதுவாக அசுத்தமான நீரில் எளிதாகப் பரவும். இப்போது பின்பற்றப்படும், நவீன கழிவுநீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற அமைப்புகளால் காலரா பெரியளவில் குறைந்துள்ளது. போதுமான சுகாதாரம் இல்லாமல் நெரிசலான சூழ்நிலையில் பொதுமக்கள் வாழும் போது, காலரா பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

14 நாட்கள்
காலரா பாக்டீரியா நமது உடலில் ஏழு முதல் 14 நாட்கள் வரை இருக்கும். அந்தச் சமயத்தில் மற்றவர்களுக்கும் அது எளிதாகப் பரவக் கூடும். பெரும்பாலான காலரா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கே முக்கிய அறிகுறியாக உள்ளது. குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படும். காலரா ஆரம்பக் கட்டத்தில் ஏற்படும் வாந்தி சில மணி நேரம் வரை இருக்கும்.

நீரிழப்பு
மற்றொரு முக்கிய அறிகுறி நீரிழப்பு ஆகும். உடல் எடையில் 10% அல்லது அதற்கு மேலும் கூட நீரிழப்பு ஏற்படலாம். எரிச்சல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் வறட்சி, அதிக தாகம், வறண்ட மற்றும் சுருங்கிய தோல் ஆகியவை காலரா நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். மேலும், இதயத் துடிப்பு அதிகரிப்பது. றைந்த இரத்த அழுத்தம் ஆகிய அறிகுறிகளும் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிகிச்சை முறை
காலரா என்பது எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். ORS கரைசல் நீரை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். சராசரியாக முதல் நாளில் 6 லிட்டர் வரை ORS தேவைப்படலாம். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு விரைவாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், ஆரோக்கியமான நபர்களுக்குக் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். குறிப்பாகக் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் உணவைக் கையாளும் முன்பும் சோப்பு போட்டு 15 விநாடிகளுக்குக் கழுவ வேண்டும். அல்லது சான்டிசைர் மூலம் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான கொதிக்க வைக்கப்பட்ட அல்லது ஆரோ நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பல் துலக்குவதற்குக் கூட சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்துங்கள்.

தவிருங்கள்
முழுமையாகச் சமைத்த மற்றும் சூடாக இருக்கும் உணவை மட்டுமே உண்ண வேண்டும். பாதி சமைக்கப்பட்ட உணவு, குளிர்ந்த நிலையில் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டாம். சாலையோர உணவுகளை முடிந்த வரை தவிர்க்கவும். கொதிக்க வைத்த நீரைத் தவிர மற்ற நீரை அருந்த வேண்டாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications