Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது சிவில் சட்டம்! முஸ்லீம் -கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல இந்துக்களுக்கும் பாதிப்பு! -இனிகோ இருதயராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது சிவில் சட்டத்தால் முஸ்லீம்கள் -கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல இந்துக்களுக்கும் பாதிப்பு என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு அவசரப்படுவது ஏன்? எனவும் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

Christian Goodwill Movement President Inigo Irudayaraj asked, Why is the BJP government rushing to implement the General Civil Code?

ஒரே குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி சட்டம் என்றால் அந்த குடும்பத்தை நடத்த முடியாது. அது போலதான் இரண்டு சட்டங்களின் கீழ் நாடு இயங்க முடியாது என்றும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும் என்றும் பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்களை தூண்டிவிடவே எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்று இஸ்லாமிய மக்கள் மீது அக்கறை இருப்பவர் போல் நீலிக் கண்ணீர் வடித்துள்ளார் பிரதமர் மோடி.

அனைவரும் அவர்களின் மதம் மற்றும் மரபு சார்ந்த சட்டங்களை பின்பற்றுவதற்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. அதாவது இந்திய மக்களிடையே காணப்படும் பன்முகத்தன்மையை அங்கீகரித்திருக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்.

குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பழங்குடி சமூகங்கள் பின்பற்றும் மரபுகள் வெவ்வேறானவை அது மட்டுமல்ல இந்து மதத்திலேயே பல்வேறு நடைமுறைகள் வெவ்வேறாக இருக்கிறது.

பரந்து விரிந்த இந்த தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் இடையே வாழும் மக்களின் மொழி வேறாக இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன. நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் வெவ்வேறாக இருக்கிறது. ஒவ்வொரு சமூகத்திற்கும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கின்றன.

எனவே இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை மட்டும் அல்ல, பெரும்பான்மை இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகள் அனைவரையும் பாதித்து பிளவுபடுத்தும் என அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக அக்கறை உள்ளவர்களும் பாஜக அரசுக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளனர்.

இது மட்டுமல்ல. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. எஸ். சவுகான் தலைமையிலான 21 வது சட்ட ஆணைய அறிக்கை, "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு முரணாக அமையும். நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கையும் செய்திருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் வாழும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, சீக்கியர்கள், ஜெயின் மற்றும் பழங்குடியினர் என பலதரப்பு மக்களுக்கு ஒரே மாதிரியான சட்டம், மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள் தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்றவைகளில் உள்ள சட்ட உரிமைகளை மாற்றி அமைக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

பன்முகத் தன்மை கொண்ட மக்கள் அமைதியாக, ஒன்றிணைந்து, இணக்கத்தோடு வாழும் இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், என்ன நடக்கும்? அப்படி பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு அவசரப்படுவது ஏன்?
வேறு ஒன்றும் இல்லை.

இந்த ஆண்டில் இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர், முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான நம்பிக்கைகளின் மீது பொது சிவில் சட்டம் என்கின்ற தாக்குதலை நடத்த தொடங்கி இருக்கிறது பாஜக அரசு.

பொது சிவில் சட்டம் என்கிற இந்த பிளவுபடுத்தும் முயற்சியால், நாட்டின் ஒற்றுமை வீழ்த்தப்படுவதோடு , இந்த தேசத்தை துண்டாடவும் மோடி துணிந்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவு. இதை இந்திய மக்கள் உணர்ந்து பா.ஜ.க. வை வரும் தேர்தல்களில் விரட்டியடிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+