கிறிஸ்துமஸ் விழா.. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆலயத்தில் கொண்டாட்டம்
சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள தூய ஆரோக்கிய நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இயேசு பிரான் பிறந்த டிசம்பர் திங்கள் 25ம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டு தோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தூய ஆரோக்கியநாதர் ஆலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சபை வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்பு திருச்சபை ஆலயத்தின் பங்கு தந்தை ஜே. பெரிய நாயகம் அடிகளார் இயேசுவின் பிறப்பு, அவர் ஆற்றிய அற்புதங்கள் என பல நிகழ்வுகளை மக்களுக்கு வேதாகமத்திலிருந்து எடுத்துரைத்தார்.
திருச்சபை வழிபாட்டிற்கு வந்த விசுவாசிகள் இயேசுவின் பிறப்பு சம்பந்தமான பாடல்களை இனிய இசையுடன் இசைத்து மகிழ்ந்தனர். இது குறித்து பங்கு தந்தை ஜே. பெரிய நாயகம் அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது :

காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியை கண்டார்கள். மரண பயம் நிறைந்த நிழலில் வாழ்ந்த மக்கள் புதிய வாழ்வை கண்டனர். இன்று நமக்காக சுடர் ஒளி போல இயேசு பிறந்துள்ளார். அவரது வேத வாக்குக்கு இணங்க கிருஸ்து பிறந்த இந்நாளை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
எனவே, இத்திருச்சபை சார்பாக அனைத்து பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்..
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications