நடுவானில் ரகளை.. விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி சென்னையில் கைது
சென்னை: விமானத்தில் புகைபிடித்த பயணி ஒருவரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவை சேர்ந்த சையத் லியாகத் அலி என்ற அந்த பயணி, கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த விமானத்தில், நடுவானில் புகைபிடித்ததாக தெரிகிறது. விமான பணிப்பெண்கள் கண்டித்தும், அவர் கேட்காமல் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சையத் லியாகத் அலியை, சென்னை விமான நிலைய போலீசில், அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தோஹாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணி ஒருவர் சிகரெட் பிடித்து ரகளையில் ஈடுபட்டு கைதான சம்பவம் நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்தபோது, விமான பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு எதிராக வேலூரை சேர்ந்த பாலாஜி (58) என்பவர் தனது இருக்கையில் அமர்ந்தபடி சிகரெட் புகைத்தார். பணிப்பெண்கள், புகைபிடிக்க எதிர்ப்பு தெரிவித்தபோது, பாலாஜி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விமான பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு தகவல் கொடுத்தார்.அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் தரையிறங்கியதும், தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் ஏறி, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications