பார்க்கறதுக்கு கஸ்தூரி மாதிரியே இருக்காமே.. நீலத்துணியால் மூடி.. தொட்டு தொட்டு பார்த்து.. வாவ் சமந்தா
சென்னை: நடிகை சமந்தாவுக்கு சிலை வைத்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அத்துடன் சோஷியல் மீடியாவிலும் இணையவாசிகள் திரண்டு வந்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் மீது அபரிமிதமாக அன்பை பொழிபவர்கள். தங்கள் அன்பு எவ்வளவு என்பதை அவர்களால் உறுதியாக வரையறுத்து காட்ட முடிவதில்லை.

அதனால், சிலை வைத்து வழிபடும் அளவுக்கு அதாவது கடவுளாகவே பார்க்கப்படுவதே அவர்களின் அன்பின் உச்சமாக இருக்கிறது.. நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது உட்பட பல்வேறு செயல்கள், வழிபாடு முறைகளையே பிரதிபலிக்க செய்து வருகிறது என்றாலும், கோயில் கட்டுவது, ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பாக பார்க்கப்படுகிறது..
நடிகைகள்: அதுவும் நடிகர்களைவிட நடிகைகளுக்கு கோயில் கட்டுவது பிரபலமாகி வருகிறது. முதன்முதலில் குஷ்புவுக்கு கோயில் கட்டியபோது, தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.. அப்போதைய நேரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது. இதற்கு பிறகு, நிதி அகர்வால், நயன்தாரா, ஹன்சிகா கோவில்கள் கட்டப்பட்டுள்ளன... தீவிர ரசிகர்களால் கோவில் கட்டி வழிபடும் இந்த வழக்கம் ஆந்திராவிலும் பற்றிக்கொண்டுவிட்டது..

நயன்தாரா குஷ்பு: அந்தவகையில், பாபட்லா மாவட்டம் ஆலப்பாடு பகுதியை சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர், சமந்தாவுக்கு கோயில் கட்டி இருக்கிறார். இவர் ஒரு கார் டிரைவர்.. சமந்தாவின் தீவிர ரசிகராம். சமீபநாட்களாக, கடுமையான நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்ததால், தெனாலி சந்தீப் திருப்பதி, சென்னை, வேளாங்கண்ணி, கடப்பா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சர்வ மத பிரார்த்தனையில் ஈடுபட்டவரும்கூட.. சமந்தாவுக்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு பகுதியில், கோவிலை கட்டி உள்ளார். கோவிலின் மையப் பகுதியில் சமந்தாவின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்...
சமந்தா சிலை: சமந்தாவின் பிறந்த நாளான நேற்று இந்த கோவிலை திறந்து வைத்தார். அப்போதே கோவிலில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இந்த கோவிலை சமந்தாவின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர். சமந்தா கோவிலில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலை சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சந்தீப் சொல்லும்போது, நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே, நான் அவரது ரசிகனாக இருந்து வருகிறேன். அவரது உணர்வு மற்றும் கருணை, அறக்கட்டளை மூலம் பல குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்துள்ளார். இது என்னை ஊக்கப்படுத்தியது.. 2 பிள்ளைகளின் அப்பாவான நான், சமந்தாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது முதலில் யாரும் நம்பவில்லை. நான் இப்படி பணத்தை வீணடிப்பதாக சொன்னார்கள்.. எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஊர்மக்கள் சொன்னார்கள்...

ஹேப்பி பர்த்டே: ஆனால், அவர்களின் கருத்துக்களை நான் கண்டுகொள்ளவேயில்லை.. சமந்தாவுக்கு கோவில் கட்ட எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது. அவர்கள் என்னை ஒருமுறை கூட கேலி செய்யவில்லை. கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் சொல்லவில்லை.. கோவில் திறப்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்தேன். இது இப்போது சமந்தா கோவிலை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் என்றார்.
நீலத்துணி: முன்னதாக, நீலத்துணியால் மூடியபடி அந்த சிலை கொண்டு வரப்பட்டது அந்த சிலை.. பிறகு, தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து இந்த சிலையை சந்தீப் திறந்து வைத்துள்ளார்.. சிலைக்கு ரோஜா இதழ்களை தூவி கையெடுத்து கும்பிட்டார்.. ஆனால், இவர் மட்டும்தான் கும்பிட்டார்.. அவரை சுற்றியிருந்த ஒருத்தர்கூட சிலையை வணங்கவில்லை என்பது வேறு விஷயம்.. பிறகு சமந்தா உருவப்படம் பொறித்த கேக்கை குடும்பத்தினருடன் சேர்ந்து வெட்டி, சமந்தாவின் பிறந்த நாளை கொண்டாடினார் சந்தீப்.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த சமந்தா சிலை, பார்ப்பதற்கு சமந்தாவை போலவே இல்லையாம்.. அதுமட்டுமல்ல, பார்க்குறதுக்கு கஸ்தூரி போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.. இதை கேள்விப்பட்டு, நொந்து நூடுல்ஸாகி இருக்கிறாராம் சந்தீப்..!!












Click it and Unblock the Notifications