சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை முதல் தியேட்டர்கள் ஓபன்.. ஒரு சீட் விட்டு ஒரு சீட்.. கேண்டீனில் மட்டும் ஸ்நாக்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, மார்ச்25ம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. ஆனால் தற்போது, 5வது ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரி முதல் டெல்லி வரை பல மாநிலங்களும் தியேட்டர்களை திறக்க ஓகே கூறிவிட்டன.

கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் தியேட்டர்களில் மும்முரமாக நடந்து வருகிறது. தியேட்டர் போவோருக்கான விதிமுறைகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது.

கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்! கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்!

தியேட்டர் விதிமுறைகள்

தியேட்டர் விதிமுறைகள்

அப்படி என்னென்ன ரூல்ஸ் இருக்கிறது.. இதோ பாருங்கள்: 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு சீட் விட்டு ஒரு சீட்டில்தான் உட்கார வேண்டும். திரைப்படம் துவங்கும் முன்பும், இடைவேளையிலும் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும்.

நொறுக்குத் தீனி

நொறுக்குத் தீனி

தியேட்டர்கள் உள்ளே 24 முதல் 30 டிகிரி வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஏசி போட்டாலும், அதிக குளிராக இருக்க கூடாதாம். திரையரங்கு உள்ளே சென்று உணவு, நொறுக்குத் தீனி வழங்க கூடாது. கேன்டீனில் சென்றுதான் நொறுக்கு தீனி வாங்க வேண்டும், அங்கும் கூட, பாக்கெட் உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும்

கிருமி நாசினி

கிருமி நாசினி

ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும். அப்போதுதான், தியேட்டரில் வந்த யாருக்காவது, கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை கண்டறிய முடியும்.

டிஜிட்டல் டிக்கெட்

டிஜிட்டல் டிக்கெட்

பணம் செலுத்தி கவுண்டர்களில் டிக்கெட் வாங்குவதை விட, டிஜிட்டல் முறையில் டிக்கெட் வாங்குவது நல்லது. கூட்டத்தை குறைக்க, தியேட்டர்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
All cinema halls, theaters and multiplexes are allowed to function from 15 October in India. Here is the rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X