"வைரமுத்து" கிட்ட ஸ்டாலின்.. அந்த "பாடகியம்மா" கத்திட்டே இருக்காங்களே, நியாயமா? கேட்பது யார் பாருங்க
சென்னை: கவிஞர் வைரமுத்துவை சீண்டி, தமிழக பாஜக தலைவர் தந்துள்ள பேட்டியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோர் பாஜக எம்பி மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி, கடந்த பல வாரங்களாகவே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்..

ஆதரவுகள்: இந்த போராட்டத்தின்போது, பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.. விளையாட்டு வீரர்களின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தந்துள்ளன.. அதேபோல நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அத்துடன், டெல்லி போலீசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்... அதைவிட முக்கியமாக, "செங்கோல் வளைந்து விட்டது" என்றும் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
மேலிட பாஜகவுக்கு இந்த விவகாரம் பெரும் சங்கடமாக மாறி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், கவியரசர் வைரமுத்துவை சீண்டி தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
நக்கீரன்: "நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லக்கூடிய தமிழ்மண்ணில் நாம் பிறந்திருக்கிறோம்.. குற்றம் குற்றமே என்று நக்கீரர் எதை சொல்றாரு? அதாவது எல்லா குற்றத்துக்கும் ஒரு ஆதாரம் வேண்டும்.. குற்றத்தை முறைப்படி விசாரிக்க ஒரு புரொசிஜர் வேண்டும்..
புகார் சொன்ன மல்யுத்த வீராங்கனைகள் எந்த ஆதாரங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை... ஆனால், புகார் அளித்தவுடன் எப்ஐஆர் போட்டாச்சு.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், உடனே கைது செய்ய செய்தால்தான், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்று சொல்வது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது..

புகார்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் செங்கோல் வளைந்து விட்டது என்று சொல்கிறார்.. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நபராக திகழும் கவிப்பேரரசு வைரமுத்து மீதே, மொத்தம் 19 பாலியல் கம்ப்ளைண்ட்கள் இருக்கின்றன.. அவருக்கு லெப்ட்டில், ரைட்டில் நின்று கொண்டிருப்பது யார்? கவிதையெல்லாம் பயங்கரமா எழுதுறாரே.. யார் கூட அவர் நிற்கிறார்? முதல்வர் முக ஸ்டாலின்கூட நிற்கிறார்.
அந்த பாடகியம்மா எத்தனை வருஷமா கத்திட்டு இருக்காங்க.. அதுவும் பாலியல் விவகாரத்தில்.. இதுவரைக்கும் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையே.. அட்லீஸ்ட் அவர் மீது எப்ஐஆராவது பதிவு செய்தாங்களா? போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டு விசாரணையாவது செய்தாங்களா? நான் வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அப்படி சொன்னால் அது தவறு.. ஏன் என்றால், குற்றத்துக்காக யாரையும் கைது செய்ய முடியாது.. போலீஸ் விசாரித்து ரிப்போர்ட் தரணும்..
புகார்: அதனால், புகார் அளித்தவுடன் எப்ஐஆர் போட்டாச்சு.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், உடனே கைது செய்ய செய்தால்தான், அடுத்தக்கட்ட நகர்வுக்கு போவோம் என்று வீரர்கள் சொல்வது ரொம்ப தவறு" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications