Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சபாஷ்”.. ரொம்ப ஓபனா இருக்காரு! ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுவெளியில் மனம்விட்டு உண்மையை பேசியது அவரது வலிமையை காட்டுவதாகவும் அவர் நிமிர்ந்து நிற்பதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய அளவில் முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருபவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் அறிமுகமாகி, மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிசி ஸ்ரீராம்.

மௌன ராகம், நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், அலைபாயுதே, ஓகே கண்மணி, ரெமோ என பல திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்து முத்திரை பதித்து உள்ளார். மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

பி.சி.ஸ்ரீராம்

பி.சி.ஸ்ரீராம்

தேசிய விருது, ஃபில்ம் பேர் விருது, சைமா விருது என ஏராளமான திரைப்பட விருதுகளை வாரிக்குவித்து இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். திரையுலகம் கடந்த சமூக பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் இவர், அரசியல் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு

ஸ்டாலினுக்கு பாராட்டு

இந்த நிலையில் இன்று இவர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "பொதுவெளியில் மனம்விட்டு பேச வலிமையான மனது வேண்டும். முக ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று அனைவரிடமும் உண்மையை பேசி இருக்கிறார். இன்றைய உலகில் இது அவரை வலிமையையும், வெளிப்படைத் தன்மையையும், அச்சமற்ற நிலையையும் காட்டுகிறது. இதன் மூலம் அவர் நிமிர்ந்து நிற்கிறார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

பகிரும் திமுகவினர்

பகிரும் திமுகவினர்

பிசி ஸ்ரீராமின் பதிவை திமுகவினர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தனது மனநிலை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்ததுடன் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அவரளித்த அறிவுரையை குறிப்பிட்டே பிசி ஸ்ரீராம் இவ்வாறு கருத்திட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

 என்ன பேசினார்?

என்ன பேசினார்?

"பல முனைகளில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மத்தளத்தில் இரு பக்கமும் அடி என்பதைபோல் எனது நிலைமை இருக்கிறது. இந்த சூழலில் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் நான் யாரிடம் சொல்வது?" என்று முதலமைச்சர் பொதுக்குழுவில் பேசியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+