கல்பாக்கத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஎஸ்ஐஎப் வீரர் பலி.. இரவு பணியில் இருந்தவருக்கு சோகம்
சென்னை: சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நியைத்தில் சிஐஎஸ்எஃப் எனும் மத்திய தொழில் பாதுகாப்ப படை வீரர் வைத்திருந்த துப்பாக்கி தானாக சுட்டதில் அவரது உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கம் அணுஉலை செயல்பட்டு வருகிறது. இந்த அணுஉலை என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆபத்து நிறைந்த இடம் என்பதால் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் கல்பாக்கம் அணுஉலையில் நேற்று பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் ஈடுபட்டு இருந்தார். இன்று காலையில் அவருக்கு பணி முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு திடீரென்று சுட்டது.
இதில் கண்இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த தோட்டா ரவி கிரணின் உடலில் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் ரவி கிரண் மீட்கப்பட்டு பஸ்சில் கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications