சென்னை பெருநகர மாஸ்டர் பிளான்.. மொத்தம் 14 கேள்விகள்.. பொதுமக்களுக்கு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகருக்கான, 'மாஸ்டர் பிளான்' எனப்படும், முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு , அனைத்து தரப்பு மக்களும், தங்கள் கருத்துகளை எளிதாக தெரிவிக்கலாம் என்றும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பெருநகரில், 1,189 சதுர கி.மீ., பரப்பளவில், 2026 - 2047 வரையிலான நகர்ப்புற திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்; என்னென்ன திட்டங்கள் வர வேண்டும் என்பதில், மக்கள் கருத்தறிவது மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. இதற்காக மண்டலங்கள் வாயிலாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

Citizens are invited to comment on the Chennai Metropolitan Master Plan

சென்னை மற்றும் புறநகரில், 29 மண்டலங்களிலும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், எம்.எல்.ஏ.,க்களிடமும் கருத்து பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விகள் அடங்கிய படிவங்களை பொது மக்கள், 'கியூ ஆர்' குறியீட்டை தங்கள் மொபைல் போன் வாயிலாக ஸ்கேன் செய்து, எளிதாக பெறலாம்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அன்பார்ந்த பொதுமக்களே, சென்னையின் எதிர்காலத்தை கட்டமைக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் முழுமைத் திட்டத்தினை (2027-2046) தயாரிக்க உள்ளது. இத்திட்டம் 2027 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.cmavision.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

தொலைநோக்கு ஆவண தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கேட்பு படிவம், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்த உதவுகின்றது. இதன்மூலம் நவீன, முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் உலகளாவிய நகரமாக எதிர்கால சென்னையை மாற்ற விரும்புகின்றது. இந்த தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Citizens are invited to comment on the Chennai Metropolitan Master Plan

வயது, பாலினம், மாணவரா, மாற்றுத்திறனாளியா, வீட்டு வசதி, வாழ்க்கைத் தரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் முதலீடுகள் மற்றும் நகரத்தின் பிரதி பிம்பம் ஆகியவை குறித்து அந்த இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+