இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது.. கொதித்த கார்த்திக் சுப்புராஜ்
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை மததுன்புறத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்து அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என பாஜக கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியதுடன், குடியுரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.
Citizenship Amendment Act - Sounds seriously wrong & against Secularism..
— karthik subbaraj (@karthiksubbaraj) December 17, 2019
Let's keep India Secular
Say NO to CAA
Say NO to NRC
Say NO to Police Violence on Students
இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..... #IndiansAgainstCAB #JamiaProtests
அந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்று அச்சத்துடன் போராடி வருகிறார்கள். இதேபோல் பிற மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாக கூறி போராட்டங்களை நடக்கின்றன. தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தரப்படாததை கண்டித்தும் முஸ்லீம்களுக்கு மட்டும் பாகுபாடு கட்டாப்படுவதாக விமர்சித்தும் போராட்டங்கள் நடக்கின்றன
இந்நிலையில் குடியுரிமை சட்டம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்தியாவை மதச்சாற்ற நாடாக நீடிக்க வைப்போம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம். அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு 'நோ' சொல்வோம். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications