நாளை உண்மையை அம்பலப்படுத்துவோம்.. போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு.. மாபெரும் திட்டம் ரெடி!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்.

ஸ்டாலின் பேட்டி
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும். நாளை நடக்கும் போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். இந்த சட்டத்தின் பின்னணியை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன உண்மை
மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவோம். இலங்கையில் பௌத்த மதவாதிகளால் தமிழ் இந்துக்களும், இஸ்லாமியர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.ஈழ தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் கடமையை செய்ய திமுக எப்போதும் தயங்காது.

பாஜக பிரச்சாரம்
இந்துக்கள் இந்துக்கள் என்று பாஜக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தமிழர்களை பாஜக இந்துக்களாக கூட மதிப்பு இல்லை. அப்படி இருக்கையில் தமிழர்கள் எப்படி இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள். கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்?

அவசர தேவை
இதை திருத்துவதற்கு அவசர தேவை என்ன?. அதிமுக இதற்கு எதிராக வாக்களித்து இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறது , என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications