சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவு முழுக்க நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. ஹாப்பி நியூ இயருக்கு பதில் ஓங்கி ஒலித்த ஆசாதி கோஷம்!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நேற்று இரவு முழுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship amendment protesters join hands on new year 2020

    சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நேற்று இரவு முழுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மூன்று வாரமாக தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாட்டு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாடு முழுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையில் கூட சிஏஏ போராட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. முக்கியமாக டெல்லியில் நேற்று சிஏஏ எதிர்ப்பு போராட்டம் பல இடங்களில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

    புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு.. விண்ணைப் பிளந்த ஹேப்பி நியூ இயர் கோஷம்! புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு.. விண்ணைப் பிளந்த ஹேப்பி நியூ இயர் கோஷம்!

    டெல்லி போராட்டம்

    டெல்லி போராட்டம்

    நாடு முழுக்க தற்போது புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு இடையில்தான் சிஏஏ எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. டெல்லியில் ஷகீன் பாக் பகுதியில் அதிக அளவில் மக்கள் கூட போராட்டம் நடத்தினார்கள்.

    வானிலை

    வானிலை

    டெல்லியில் மிகவும் குளிரான வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக டெல்லியில் சில இடங்களில் 2 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் தற்போது அங்கு மக்கள் நள்ளிரவில் கூடி சாலையில் நின்று போராட்டம் நடத்தி உள்ளனர்.

    என்ன கோஷம்

    என்ன கோஷம்

    அதேபோல் சரியாக புத்தாண்டு விடிந்த போது மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆசாதி, ஆசாதி என்று கோஷம் இட்டனர். இன்னும் சிலர் இங்குலாப் சிந்தாபாத் என்று கோஷமிட்டனர். புத்தாண்டு தினம் ஒன்று இந்தியாவின் தலை நகரில் இப்படி கொண்டாடப்பட்டு இருப்பது உலக அளவில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னையில் போராட்டம்

    சென்னையில் போராட்டம்

    அதேபோல் சென்னையிலும் மெரினா, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் இதேபோல் போராட்டம் நடத்தப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையில் இந்த போராட்டம் நடந்தது. மேலும் புனே, மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடந்தது.

    English summary
    Citizenship Amendment: Students and Youngsters join hand on New Year night to protest in Delhi with Azadi slogans.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X