ஊதிய ஒப்பந்தகாலம் 4 ஆண்டுகளாக மாற்றம்: கண்டனம் தெரிவித்து சிஐடியு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழக அரசு அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஊதிய உயர்வாக ரூ.1,000
அப்போது அவர் கூறுகையில், ''தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுப்படி, 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, சில கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வாக ரூபாய் 1,000 வழங்கப்படும். பணியாளர்களுக்கான படிகளும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி உயர்த்தப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபாயாக
அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணையை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்கப்பட உள்ளது. மேலும் ஊழியர்களுக்கான சீருடைக்கு தையல் கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்
இதற்கு பின்னர் சி.ஐ.டி.யு. தலைவரான சவுந்தரராஜன் கூறுகையில், ''தாங்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில கோரிக்கைகளே நிறைவேற்றப்பட்டுள்ளன.ஊதிய உயர்வு குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கான ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திடவில்லை. மேலும் தமிழக அரசை கண்டித்து இதற்காக நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று கூறினார்.

ஆர்ப்பாட்டம்
இதேபோல் அண்ணா தொழிற்சங்கம் தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், ''நாங்கள் கொடுத்திருந்த எந்த கோரிக்கையும் இதில் நிறைவேற்ற வில்லை. எனவே நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை" என்றார். இந்த நிலையில், நேற்று கூறியபடி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றியதை கண்டித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள பேருந்து டிப்போவில், ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருகிறார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications