Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவில் சர்வீஸ் கனவா? தமிழக அரசின் இலவச பயிற்சிக்கு ரெடியா? இன்று ரொம்ப முக்கியமான நாள்! மறக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்க பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள், அரசின் பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும், அவர்களுக்கு கோவை, மதுரை, சென்னையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட்டது.

government of tamil nadu naan muthalvan jobs

இதன் மூலம் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் நான் முதல்வர் திட்டத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்க பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது.

இதுதொடர்பான அறிவிப்பில்,"தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் 2025ம் ஆண்டுக்கு மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு ஆர்வலர்களை சேர்க்கவேண்டி "நான்முதல்வன்" திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் 08.10.2024 அன்று காலை 11.00 மணிக்கும். தற்காலிக தெரிவுப்பட்டியல் 08.10.2024 அன்று மாலை 5.00 மணிக்கும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய அதிகாரபூர்வ இணையதளத்தில் www.civilservicecoaching.com வெளியிடப்படவுள்ளது.

சென்னை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முழு நேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள், மதுரை மற்றும் கோயம்புத்தூர் முழு நேர பயிற்சிக்கு தலா 100 நபர்கள் வீதம் 200 நபர்கள் ஆக மொத்தம் 525 ஆர்வலர்கள் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும், 14.10.2024 முதல் 17.10.2024 வரையிலான நான்கு நாட்களில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும். 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய நாட்களில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

அதில் கலந்து கொள்ளவுள்ள ஆர்வலர்கள் அனைத்து மூலசான்றிதழ்கள் கையொப்பமிட்ட 3 ஒளி நகல்களுடன், பிறப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், அனைத்து கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் பதிவிறக்கம் செய்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய சேர்க்கைசீட்டு (Admit Card) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புடன் விடுதி சேர்க்கையும் நடைபெறும். முதல்நிலைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 21.10.2024 முதல் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே இப்பயிற்சி மையங்களில் முழு நேரபயிற்சி பெற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும், விவரங்களுக்கு 044 24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 93457 66957 என்ற புலன எண் (வாட்ஸ் -அப்) மூலமாகவும், [email protected]என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+