சித்ராவின் கடைசி நிமிடங்கள்.. ஹேமந்த் சிக்கியது எப்படி.. ரூமை விட்டு ஏன் சென்றார்.. பரபர தகவல்கள்
சித்ராவின் கணவரின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்
சென்னை: சித்ராவின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தன.. போலீசாரிடம் ஹேமந்த் என்ன வாக்குமூலமாக சொன்னார் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட அறையில் ஹேமந்த் மட்டுமே இருந்த நிலையில், எல்லாருடைய சந்தேகப்பார்வையும் அவர் மீதே எழுந்தது.. எதற்காக இத்தனை நாள் விசாரணை நடக்கிறது? இன்னும் போதுமான தகவல்களை போலீசார் பெறவில்லையோ என்ற கேள்விகளும் பரவலாக எழுந்தது.
ஆனால், 6 நாளும் நம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணயை ஹேமந்திடம் மேற்கொண்டு வந்துள்ளனர்.. அவர் என்ன சொன்னாரோ அனைத்தையுமே வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.. தன் மகள் சாவுக்கு ஹேமந்த்தான் காரணம் என்பதை சித்ராவின் அம்மா, 6 நாட்களுக்கும் முன்பும் சொன்னார், நேற்று ஆர்டிஓ விசாரணை முடிந்தும் சொன்னார்.

தற்கொலை
எனினும், ஹேமந்த் விஷயத்தில் போலீசார் அவசரப்படவில்லை.. 6 நாட்களுக்கு பிறகுதான், சித்ராவின் தற்கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர்.. இப்போதைக்கு 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டு, ஜெயிலில் உள்ளார் ஹேமந்த்.. நேற்று சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை நடந்த நிலையில், இன்று ஹேமந்த்தின் பெற்றோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை
இதனிடையே, ஹேமந்த்திடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணையின்போது என்ன கேட்டனர், அதற்கு ஹேமந்த் என்ன பதில் தந்தார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஹேமந்த்திடம் "நீங்கள் ஏன் அந்த ரூமை விட்டு சென்றீர்கள்" என்று போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு, சித்ரா குளிக்க செல்வதாக கூறியதால் ரூமில் இருந்து வெளியேறியதாக முதலில் சொல்லி உள்ளார்.. பிறகு, காரில் உள்ள ஹேண்ட்பேக்கை எடுக்க சொன்னதால், வெளியே சென்றதாக சொல்லி உள்ளார். பிறகு காரில் சில ஆவணங்களை சித்ரா எடுத்து வர சொன்னதால் வெளியே சென்றதாக கூறியுள்ளார்.. இப்படி மாத்தி மாத்தி பேசியதுதான் ஹேமந்த் மீதான சந்தேகம் அதிகரிக்க காரணமாக இருந்ததாம்.

குற்றச்சாட்டு
இதற்கு நடுவில் சித்ராவின் அம்மாவும், "என் பொண்ணை சாவடிச்சிட்டான்" என்று ஹேமந்த் மீது குற்றஞ்சாட்டவும், சந்தேகம் வலுவாகி வந்துள்ளது.. இதற்கு பிறகுதான், துணை கமிஷனர் தீபாசத்யன் நேரடியாகவே வந்து ஹேமந்திடம் விசாரணையை நடத்தி உள்ளார்.. ஷூட்டிங்கில் முடிந்து காரில் வரும்போதே, நெருக்கமான காட்சிகள் நடித்தது தொடர்பாக தகராறு வந்துள்ளது.. ஹோட்டல் ரூமுக்கு சென்ற பிறகும் அது தொடர்ந்துள்ளது.

மனக்கசப்பு
அப்போது ஹேமந்த், இனி இந்த மாதிரி சீன்களில் நடிக்க வேண்டாம் என்று சொல்லவும்தான், சித்ரா அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பிறகுதான் ஹேமந்த் ரூமை விட்டு வெளியே சென்றாராம்.. "நான் உங்களையே நம்பி இருக்கேன்" என்று சித்ரா சொன்னதற்கு, அவரை திட்டிவிட்டு வெளியே சென்றாராம்.. ஒருபுறம் ஹேமந்தின் நடவடிக்கை மற்றொருபுறம் தன் அம்மாவுடன் சித்ராவுக்கும் மனக்கசப்பு இருந்து வந்ததால், அளவுக்கு அதிகமான மனஉளைச்சலுக்கு சித்ரா ஆளாகிதான் அப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

விசாரணை
அதேபோல, திருவான்மியூரில் வீடு கட்டவும், புதிதாக கார் ஒன்றை வாங்குவதற்கும் சித்ரா கடன் வாங்கியதாகக் தெரிகிறது.. இதற்கு பிறகு லாக்டவுனில் சிக்கி கொண்டு, மறுபடியும் ஷூட்டிங் தொடங்கவும், ஓய்வின்றி உழைத்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது கல்யாணத்தை பிரம்மாண்டமாகத நடத்தவும், சினிமா பிரபலங்களை அழைக்க வேண்டும் என்று சித்ரா திட்டமிட்டுள்ளார்.. ஆனால், அதற்கு ஹேமந்த எந்தவிதமான உதவியும் செய்யவில்யாம்.

போலீசார்
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. எப்படியும் ஹேமந்தை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் உண்மையான காரணங்கள் அனைத்தையும் நம் போலீசார் வெளிக்கொணருவார்கள் என்று நம்பப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications