கோயம்பேடு பிரபல மதுபான விடுதியில் பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை.. தடுக்க போனவர்களுக்கு தரமான சம்பவம்
சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல மதுபான விடுதி செயல்படுகிறது. இங்கு ஞாயிறு அன்று இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து மது அருந்தினர். அப்போது போதையில் இளம்பெண்கள் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு எழுந்தது.மோதலில் ஈடுபட்ட பெண்களை தடுக்க முயன்றவர்களையும் மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.
சென்னையில் மதுபான விடுதிகள், பப்கள், ஏராளமான உள்ளன. கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான விடுதி இயங்கி வருகிறது. இந்த மதுபான விடுதிக்கு கடந்த செப்டம்பர் 8ம் இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து மது அருந்தியுள்ளார்கள். பின்னர் அவர்கள், மதுபான விடுதியில் இருந்து அங்குள்ள வாகனங்கள் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு போதையில் சென்றுள்ளார்கள்.

அப்போது அங்கு ஏற்கனவே மது போதையில் 2 இளம்பெண்கள் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென இருதரப்பு பெண்களுக்கும் இடையே காரை எடுக்கும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியதாம். ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்து கட்டிப்புரண்டு சண்டை போட்டார்களாம்.
அங்கு மது போதையில் மோதலில் ஈடுபட்ட பெண்களை பார்த்த பணியில் இருந்த ஊழியர்கள், ஓடிச்சென்று தடுக்க சென்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் கெட்ட வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றார்களாம். மது போதையில் இளம்பெண்கள் செய்த அட்டகாசத்தை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பார் ஊழியர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் போதையில் ரகளை செய்த 4 பெண்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். மேலும் மது போதையில் தள்ளாடியபடி இருந்த 2 இளம்பெண்கள், சாதாரண உடையில் வந்த பெண் போலீசிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்..
இதையடுத்து போதையில் வாக்குவாதம் செய்த 2 இளம்பெண்களை, பெண் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மதுபான விடுதியில் மதுபோதையில் இருதரப்பு இளம்பெண்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் கோயம்பேடு பாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications