குளியலறையில் மாணவி.. கையும் களவுமாக சிக்கிய பக்கத்து வீட்டுக்காரர்.. 100 வீடியோக்களாம்! அசிங்கம்!
மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர் சிக்கிய நிலையில், அவரது செல்போனில் அதுபோல 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன.
சென்னை : சென்னை வடபழனி பகுதியில், மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தூய்மை பணியாளரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவி குளியலறையில் குளிக்கும்போது கழிவறையில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர்.
கையும் களவுமாகப் பிடிபட்ட அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அதேபோல, அந்த பாத்ரூமில் பெண்கள் குளித்தபோது எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாத்ரூமில் வீடியோ
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அங்கு 10 வீடுகளுக்கும் சேர்த்து பொது குளியலறை உள்ளது. அந்த பாத்ரூமில் மாணவி குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அருகில் இருந்த கழிவறை வழியாக, செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்த அந்த மாணவி, பயந்துபோய் உடனே ஓடிப்போய் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், குளிப்பதை வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பக்கத்து வீட்டுக்காரர்
உடனே சம்பவ இடத்திற்கு வந்த வந்த போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த நபரின் பெயர் வினோத்குமார் (37) என்பதும், 10 குடும்பங்கள் கொண்ட குடியிருப்பு பகுதியில் மாணவியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக அவர் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

கேவலமான செயல்
வினோத் குமார் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 10 வீடுகளும் அவற்றிற்கு பொது குளியலறையும் இருப்பதால் அந்த பாத்ரூமில் குளிக்க வரும் பெண்கள், சிறுமிகள் என அனைவரையும் தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த வினோத் குமார் இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது
அருகில் வசிக்கும் வீடுகளின் பெண்கள் குளிக்கும்போது அவர்களுக்கே தெரியாமல் வினோத் குமார் செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் அவரது செல்போனில் இருந்துள்ளன. இதையடுத்து வினோத்குமார் மீது போக்சோ சட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications