"இந்த" பெல்ட்டை நோக்கித்தான் வருது.. கனமழை பிரேக் எடுக்க போகிறதா? வெதர்மேன் வெளியிட்ட எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாக பெய்ய தொடங்கி உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது உச்சம் தொட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இந்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.

தமிழ்நாடு
இந்த நிலையில்தான் தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், சென்னை பெல்ட்டை நோக்கி கூடுதல் மேகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த பேட்டர்ன் திங்கள் கிழமை காலை வரை தொடரும். பகல் நேர புயல் காற்று வலிமை குறைவாக இருக்கும். அதே நேரம் இரவு நேரம் மற்றும் அதிகாலை நேர காற்று வலிமையாக இருக்கும். இதனால் அந்த நேரங்களில் நல்ல மழை பெய்யும்.

வானிலை
வடக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும். வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளனர். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை பிரேக் எடுத்து பெய்யும். நாளை தெற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் இந்த மழை ஏற்படும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வரும் 20ம் தேதி நகரும். இரவு நேரத்தில் இருந்து அதிகாலை நேரம்தான் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முக்கியமான நேரம். அடுத்த 2 நாட்களுக்கு லேசான சிறிய அளவிலான மழை பெய்யும். திங்கள் கிழமை மாலை வரை லேசான மழை பிரேக் எடுத்து பெய்யும். திங்கள் கிழமை மாலையில் இருந்து 20ம் தேதி வரை மழை பிரேக் எடுக்கும்.

தமிழ்நாடு வெதர்மேன்
தற்போது தெற்கு தமிழ்நாடும் இந்த மழை பார்ட்டியில் இணைந்துவிட்டது. தூத்துக்குடி, நெல்லையில் கனமழை பெய்து உள்ளது. அதேபோல் கொடைக்கானலில் நல்ல மழை பெய்து உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கணிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications