சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நச்சுன்னு கணக்கு போட்ட எடப்பாடியார்.. ஒரே உறையில் 2 கத்தி.. ஒரே காரில் இபிஎஸ் ஓபிஎஸ்.. இதான் மேட்டரா

ஒரே காரில் முதல்வரும், துணை முதல்வரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த சில தினங்களாகவே புகைச்சலில் சென்று கொண்டிருந்த அதிமுகவின் இரட்டை தலைமைகளும் ஒன்று சேர்ந்து விட்டனர்.. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒரே காரில் பவணி வந்துள்ளனர்.. இதற்கு என்ன காரணம்? பின்னணியில் என்ன நடந்தது?

சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவில் சுமூகமான சூழல் காணப்படவில்லை.. முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்தான் என்று ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டபோதிலும், அவருக்கு ஏதோ அதில் உடன்பாடு இல்லையோ என்று தெரியவில்லை.

முதல்வர் பிரச்சாரத்தை தொடங்கும் அதே நாளில், தன்னுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்துவிட்டு பெருத்த மவுனத்திற்குள் நுழைந்துவிட்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்..

 துணை முதல்வர்

துணை முதல்வர்

ஒரு பக்கம் தமிழக பாஜக, முதல்வர் வேட்பாளருக்கு செக் வைத்து கொண்டும், எடப்பாடியாரை குழப்பிக் கொண்டிருக்கும் நிலையிலும்கூட, ஓபிஎஸ் அதுகுறித்து வாய் திறக்காமல் அமைதி காத்தார். எனினும், முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும், பல்வேறு அதிரடிகளை ஓபிஎஸ் இன்னொரு பக்கம் ஓபிஎஸ் எடுத்து கொண்டுதானிருந்தாராம்.

 முதல்வர்

முதல்வர்

எடப்பாடி மறுபடியும் முதல்வராகி விட்டால், கட்சி மொத்தமும் அவருடைய கட்டுப்பாட்டில் சென்றுவிடும், அதுவே அதிமுக தோல்வியை தழுவி விட்டால், கட்சியை ஆட்டிப்படைக்க ஒரு வாய்ப்பு தனக்கு இருக்கும் என்று கணக்கு போட்டாராம். அதனால்தான் ரஜினிக்கு முட்டுக் கொடுத்து பேசி வந்தது எல்லாம்.. இந்தசமயத்தில், திடீரென ரஜினி பின்வாங்கிவிடவும், ஓபிஎஸ்சுக்கும் அது இடியாக தலையில் விழுந்துள்ளது.

 சலசலப்புகள்

சலசலப்புகள்

இதனிடையே, என்னதான் அதிருப்திகள், சலசலப்புகள் தமிழக பாஜகவிடம் இருந்தாலும், அதனை முற்றிலுமாக பகைத்து கொள்ள எடப்பாடியார் தரப்பு விரும்பவில்லையாம்.. அதனால்தான் முருகன், எத்தனையோ முறை முதல்வர் வேட்பாளர் குறித்த எதிர்கருத்தை சொன்னாலும் அமைதி காத்து வந்துள்ளார்.. மேலும், சென்னை வரும் அமித்ஷாவுடன் சுமூகமாக பேசி கூட்டணியை முடிவுக்கு கொண்டு வரவும் எடப்பாடியார் தரப்பு விரும்புகிறது.. இதனை ஓபிஎஸ் துணையுடன் செய்துவிட முடியாது என்றும் திடமாக நம்புகிறது..

 ஒரே காரில் பயணம்

ஒரே காரில் பயணம்

அதனால்தான், அவரை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.. இருவரும் ஒரே காரில் பயணம் செய்ததும் இதற்குதானாம்! எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனி காரில் செல்லும் அவர்கள், ஒரே காரில் செல்வது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்பட்டு வருகிறது என்றாலும் அமித்ஷா வருகையின் அதிர்வு இப்போதே தென்பட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

English summary
CM Edapadi Palanisamy and OPS election campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X