இன்னும் ஒருவாரம் இருக்கு.. "ஸ்டாலினை வரச்சொல்லுங்க".. மீண்டும் அழைக்கும் எடப்பாடியார்..!
முக ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்
சென்னை: இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம்தான் இருக்கிறது.. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலினுக்கு மறுபடியும் சவால் விடுத்துள்ளார்.. மறுபடியும் தனி விவாதத்திற்கு அழைத்துள்ளார்... அதேசமயம், "சரக்கு" இல்லாததால்தான் ஸ்டாலின் விவாதத்திற்கு வர பயப்படுகிறார் என்றும் முதலமைச்சர் கிண்டல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரமாகி உள்ளதால், பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.. இதில் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் சரமாரி விமர்சனங்களை வழக்கம்போல் முன்வைத்து வருகின்றனர்.. காட்டமான கேள்விகளை கேட்டும் வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் தொடர்ந்து சுமத்தி வந்தார்.. ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக மீதான புகார்களை வரிசைப்படுத்தி சொல்லி வந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை அதிமுக தரப்பில் பதில்களும் சொல்லப்பட்டு வந்தன.. மாறாக, திமுக குறித்தும் கேள்விகளை எழுப்பியது அதிமுக தரப்பு.

எடப்பாடியார்
இந்நிலையில், முக ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, துண்டு சீட்டு இல்லாமல் தனியாக மக்கள் மத்தியில் மேடை போட்டு தனி விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தார்.

வாதம்
இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற மொக்கையான பதில்களை கூறி வந்தார்... இதையடுத்து, இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் தனியாக வந்தால் பதிலளிக்க தயார் என்றும் விவாதத்திற்கு வர வேண்டும் என்று மீண்டும் சவால் விடுத்தார். இதற்கும் சாக்கு சொல்லி தப்பித்துவிட்டார் ஸ்டாலின்.

நெட்டிசன்கள்
இதற்கு "நெட்டிசன்கள் பயந்து ஓடும் ஸ்டாலின், துண்டு சீட்டு ஸ்டாலின்" என்று சமூக வலைதளங்களில் ஸ்டாலினை கிண்டலடித்தனர். இதையடுத்து, சென்னையில் தனது 4வது கட்ட பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று மீண்டும் சவால் விடுத்தார்.

சவால்
தேர்தலுக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் தற்போதாவது ஸ்டாலின் தன் சவாலை ஏற்று விவாதத்திற்கு வருவார் என்று முதலமைச்சர் அழைத்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். பயந்து ஓடும் ஸ்டாலினை "விடாது கருப்பாக" சவாலுக்கு முதலமைச்சர் அழைக்கிறார் என்றும், "கண்டா வரச் சொல்லுங்க" என்று ஸ்டாலினை முதலமைச்சர் கூப்பிடுகிறார் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications