சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்த பேரையும் "கதற" விடும் எடப்பாடியார்.. ஓபிஎஸ்ஸை உறுத்திய "அந்த" செயல்.. அதிர வைக்கும் முதல்வர்

எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு பெருகி கொண்டே வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா மீதான மொத்த கவனமும் குவிந்துவந்தாலும், முதல்வர், துணை முதல்வர் இடையேயான பனிப்போர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்..!

இந்த 4 வருடமாகவே ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நிறைய மனத்தாங்கல்கள் இருந்து வருகின்றன.. அமமுக என்ற கட்சி தனியாக உருவாகிவிடவும், உட்கட்சி பூசல்கள் பெருக ஆரம்பித்தன.. மேலும் பாஜகவுக்கு ஆதரவான நபராகவே ஓபிஎஸ் வலம் வந்து கொண்டுள்ளார்.

டெல்லியில் ஓபிஎஸ் மகன், ஒவ்வொரு முறை அவையில் உரை நிகழ்த்தும்போதும், பாஜக எம்பியா?, அதிமுக எம்பியா? என்று குழப்பி அடிக்கும் அளவுக்கு பேசுவார்.

முதல்வர்

முதல்வர்

இதுபோக, இரட்டை தலைமை விவகாரம், முதல்வர் வேட்பாளர் விவகாரம் போன்றவை எடப்பாடியாருக்கு ஓபிஎஸ் மூலம் வந்த நெருக்கடிகள் ஆகும். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியாரை அங்கீகரிக்காமலேயே இருந்த நிலையில், ஒருவழியாக மேடையில் வைத்து அறிவித்தார்... இப்படி அறிவிக்கப்பட்டதுமே முதல்வர் தன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.. டிவி, மீடியாக்களிலும் வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரம் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது... இதை எடப்பாடியார் கவனிக்காமல் இல்லை..

கருத்து

கருத்து

அதேபோல, சசிகலா விஷயத்தில் இப்போதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் ஓபிஎஸ் இருப்பதும் வருத்தத்தையும், குழப்பத்தையும் உருவாக்க வருவதாக கூறப்படுகிறது.. இதையும் எடப்பாடியார் கவனிக்காமல் இல்லை. அதேபோல, டிஜிபி ஆபீசில் புகார் தர சென்ற அமைச்சர்களில் ஒருத்தர்கூட, தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற வருத்தமும் எடப்பாடியாருக்கு ஏற்பட்டுள்ளதாம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அதேபோல, ஓபிஎஸ்-க்கும் எடப்பாடியார் மீது லேசான பொறாமை நிழல் படிந்துவருவதாக கூறப்படுகிறது.. அதற்கு காரணம், சமீபத்தில் வேளாண் கடன் ரத்து செய்யப்பட்டபோது, எம்எல்ஏக்கள் சிலர் மகிழ்ச்சி தெரிவித்து ஓடிவந்து எடப்பாடியார் காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளனர்.. இந்த நிகழ்வினை ஓபிஎஸ் அருகில் இருந்து பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.. இதுதான் ஓபிஎஸ்-க்கு உறுத்தலாக இருந்திருக்கிறது.. இதையும் எடப்பாடியார் கவனிக்காமல் இல்லை..

வியூகங்கள்

வியூகங்கள்

ஆனால், என்னதான் தன் மீது அதிருப்திகள், பொறாமைகள், இருந்தாலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி கொண்டிருக்கிறார் முதல்வர்.. எங்கே, எத்தனை பக்க விளம்பரங்களை தந்தாலும், இந்த 4 ஆண்டு கால நெருக்கடி ஆட்சியை தன்னந்தனி நபராகவே அசத்தி காட்டிய பெருமை எடப்பாடியாரிடம் நிரம்பி தளும்புகிறது..

அதிரடி

அதிரடி

ஒருவேளை இனி வரும் காலங்களில் ஓபிஎஸ் தொடர்ந்து மறைமுகமாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், அதையும் முறியடிக்கும் வகையில், எடப்பாடியார் பல்வேறு வியூகங்களுடன் தயாராகவே இருப்பதாக சொல்லப்படுகிறது.

English summary
CM Edapadi Palanisamys mass level politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X