சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு

    சென்னை: தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்பம் குறித்த, 2 நாட்கள், சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் இன்று துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    சட்டசபை விதி 110ன்கீழ், தேசிய மின் ஆளுமை பிரிவு உதவியோடு, கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் நிறுவப்படும் என அறிவித்துள்ளேன்.

    நாளை அதிகாலை அமெரிக்கா புறப்படுகிறார் ஓ.பி.எஸ்... 10 நாள் பயணம்நாளை அதிகாலை அமெரிக்கா புறப்படுகிறார் ஓ.பி.எஸ்... 10 நாள் பயணம்

    மக்களை தேடி வரும் அரசு

    மக்களை தேடி வரும் அரசு

    மாநில குடும்ப தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும். மக்களை தேடி அரசு என்ற திட்டத்தின்கீழ், மக்களுக்கு ஆவணங்கள் தானாக வழங்கப்படும். மக்கள் தங்கள் எந்த ஒரு தேவைக்காகவும், அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தேவைகளை நிறைவேற்ற முடியும்.

    முதலீட்டாளர்களை வரவேற்போம்

    முதலீட்டாளர்களை வரவேற்போம்

    நாங்கள் முதலீட்டாளர்களை அரவணைக்கும் மாநிலமாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அவரது வழியில், முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக நாங்களும் இருக்கிறோம். சென்னையில் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகிறது.

    மனித வளம்

    மனித வளம்

    தமிழகம் அமைதியான மாநிலமாகவும், மனித வள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் இருப்பதுதான் இதற்கு காரணம். லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியலாளர்களாக வருடந்தோறும் வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இந்த நிறுவனங்கள் உதவும்.

    தகவல் தொழில்நுட்பம்

    தகவல் தொழில்நுட்பம்

    தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். ஆட்குறைப்பு செய்யாமல், எப்படி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது பற்றி, இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதியுங்கள். உங்கள் கருத்துக்களை அரசிடம் தெரிவியுங்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    பணியிழப்புகள்

    பணியிழப்புகள்

    இன்போசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy has called for a consultation on avoiding layoffs in the IT sector.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X