திமுக எம்.எல்.ஏக்கள் இருக்க பயமேன்... ஆட்சி கவிழாது.. முதல்வர் எடப்பாடி நம்பிக்கை!
சென்னை: தமது அரசுக்கு திமுக எம்.எல்.ஏக்களே ஆதரவாக இருப்பதால் ஆட்சி கவிழாது என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற முதல்நாளில் இருந்து இந்த அரசு கவிழும் என்றே திமுக கூறி வருகிறது. ஆனாலும் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
தினகரனும் முதல்வர் எடப்பாடி அரசுக்கு நாள் குறித்து பார்த்தார். கடைசியில் அவரது முகாமே மொத்தமாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாறிப் போய்விட்டது.

திமுக ஜகா
இதனிடையே சபாநாயகர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக அறிவித்தது. பின்னர் இந்த அறிவிப்பில் இருந்து ஜகா வாங்கியது.

முதல்வர் பதிலடி
அதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சிகளை திமுக மேற்கொண்டது. இதற்கும் முதல்வர் எடப்பாடி தரப்பு பதிலடி கொடுத்து திமுகவின் ஆபரேசனை முடக்கியது.

முதல்வர் நம்பிக்கை
இப்படி அதிமுக அரசுக்கு எதிராக அத்தனை முயற்சிகளையும் திமுக தரப்பு முன்னெடுப்பது குறித்து முதல்வர் தரப்பு கிஞ்சித்தும் கவலைப்படவே இல்லை. திமுக எதை செய்தாலும் அதை நம்மால் முறியடிக்க முடியும் என்கிற பெரும் நம்பிக்கை மட்டுமே முதல்வர் தரப்பின் அசாத்திய நம்பிக்கைக்கு காரணம் அல்லவாம்.

திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு
பெரும்பாலான திமுக எம்.எல்.ஏக்கள் அரசுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். திமுக எம்.எல்.ஏக்களுக்கே இப்படி செய்து தருகிறோம்... நம்ம கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சொல்ல வேண்டுமா? அதனால் அதிமுக- திமுக எம்.எல்.ஏக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தமக்கு இருக்கிறது என்பதுதான் முதல்வர் தரப்பின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு காரணம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!











Click it and Unblock the Notifications