ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு!
சென்னை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்நிலையில் ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசலாம் எனகூறப்படுகிறது. அதேபோல் தமிழக டிஜிபி நியமனம், தமிழக தலைமைச் செயலாளர் நியமனம் குறித்தும் பேசலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் முதல்வர் ஆளுநரை சந்தித்து இருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications