முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா நெகட்டிவ்.. விஜயபாஸ்கர் சொன்ன தகவல்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வீடியோவாயிலாக இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:
இன்று ஒரே நாளில், தமிழகத்தில், 26,592 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம், 9,19,204 பேருக்கு தமிழகத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அதிக பரிசோதனை
9 லட்சத்திற்கு அதிக பரிசோதனை செய்துள்ளோம். மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத ஒரு நோய்க்கு, சிகிச்சையளித்து வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 34,112 பேர். இன்று மட்டும், மருத்துவமனைகளிலிருந்து 1358 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில், 55 சதவீதம் என்ற அளவில், குணமடைவோர் விகிதம் உள்ளது.

மகிழ்ச்சி தகவல்
தமிழகத்தில், கொரோனா இரட்டிப்பாகும் விகிதம் 16 நாட்களாக உள்ளது. எனவே தமிழக மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் சரியான பாதையில்தான் சென்று கொண்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் 7 நாட்களில், கொரோனா பரவல் இரட்டிப்பானது. ஆனால் இப்போது குறைந்துள்ளது. அதிக பரிசோதனைகள், தக்க சிகிச்சை போன்றவை இரட்டிப்பு விகிதத்தை குறைத்துள்ளன.

பிளாஸ்மா சிகிச்சை
பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக உள்ளது. உயிர்காக்கும் மருத்துவமுறையாக பிளாஸ்மா சிகிச்சை மாறியுள்ளது. ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன. வேறு பல உயிர்காக்கும் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், மகிழ்ச்சியளிக்கும் தகவலாக, அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. நோய் தொற்றுக்கு வாய்ப்புள்ளது தெரிந்தும், பல மாதங்களாக, கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகி சிகிச்சைகளை மேற்பார்வை செய்தவர் ராஜிவ்காந்தி மருத்துவமனை டீன். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications