24 குடும்பங்களை காத்த "மின்னல்" தனியரசு.. உருகிப்போன கனிமொழி.. நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!
சென்னை: திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் இருந்து 24 குடும்பங்களை காப்பாற்றிய திமுக வட்டசெயலாளர் தனியரசுவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டிக்கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இரண்டு நாட்களுக்கு முன் தரைமட்டமாக இடிந்து விழுந்தது. இங்கு இருக்கும் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில் திங்கள் கிழமை காலை மொத்தமாக கட்டிடம் இடிந்து விழுந்தது.
இங்கு மொத்தம் 24 குடும்பங்கள் இருந்தன. இந்த குடும்பங்கள் அனைத்தும் கட்டிடம் இடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட காரணத்தால் மக்கள் எல்லோரும் காப்பாற்றப்பட்டனர்.

உயிர்சேதம்
இதனால் திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த குடும்பங்களை எல்லாம் காப்பாற்றியவர் அப்பகுதி திமுக வட்டசெயலாளர் தனியரசு என்பவர்தான். இவர்தான்தான் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது கேட்டு திங்கள் கிழமை நேரில் சென்று பரிசோதனை செய்துள்ளார். இதனால் திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த குடும்பங்களை எல்லாம் காப்பாற்றியவர் அப்பகுதி திமுக வட்டசெயலாளர் தனியரசு என்பவர்தான். இவர்தான்தான் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது கேட்டு திங்கள் கிழமை நேரில் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனை
இதையடுத்து கட்டிடம் விழும் என்று மிக சரியாக யூகித்து தனியரசு மின்னல் முரளி படத்தில் வருவது போல மின்னல் வேகத்தில்.. வேகமாக ஒவ்வொரு வீடாக சென்று எல்லோரையும் வெளியேற சொல்லி இருக்கிறார். இதில் சிலர் அதெல்லாம் எதுவும் ஆகாது.. நீங்க போங்க சார் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்களையும் கட்டாயப்படுத்தி தனியரசு வெளியேற்றி உள்ளார்.

வீடு இடிந்தது
வீடு இடிய போகிறது என்று சொல்லாமல்.. எல்லோரும் வெளியே போங்க வீட்டை முழுசா ஆய்வு செய்யணும் என்று கூறி அவர்களை தனியரசு துரிதமாக வெளியேற்றி இருக்கிறார். இவர் இப்படி மின்னல் வேகத்தில் செயல்பட்டதுதான் இன்று அந்த 24 குடும்பங்கள் உயிரோடு இருக்க காரணம். இந்த குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 80 பேரை தனியரசு காப்பாற்றி உள்ளார்.

பாராட்டு
24 குடும்பங்களை துரிதமாக செயல்பட்டு இவர் காப்பாற்றியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக வட்டசெயலாளர் தனியரசுவின் செயலை பார்த்து உருகிப்போன எம்பி கனிமொழி அவரை பாராட்டி உள்ளார். வீடுகள் விழுவதற்கு முன் சுதாரிப்பாக, மக்களை அங்கிருந்து துரிதமாக வெளியேற்றி, உயிரிழப்புகளைத் தடுத்து இருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள் என்று கனிமொழி தனியரசுவை பாராட்டி உள்ளார்.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
இவரின் தீரமான செயலை கேட்டு முதல்வர் ஸ்டாலின் தனியரசுவை நேரிலேயே அழைத்து பாராட்டி இருக்கிறார். நீங்கள் செய்தது மிக தீரமான செயல். பல பேரை காப்பாற்றி உள்ளீர்கள்.. உங்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் தனியரசுவை பாராட்டி உள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலின் தனியரசுவிற்கு திருக்குறள் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications