"ஓபனா சொல்றேன்".. எல்லாமே என் கண்ட்ரோல்தான்.. அந்த "நோட்டா" கட்சி இருக்கே.. அதிரடி காட்டிய ஸ்டாலின்
பாஜகவை அட்டாக் செய்து முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பேசியுள்ளார்
சென்னை: ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சிதான் என்னுடைய முதன்மையான நோக்கம்.. அதனால், உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பான முதல்வரின் வீடியோ ஒன்றை, திமுகவினர் இணையத்தில் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.
Recommended Video
கடந்த சட்டசபை தேர்தலிலேயே அபார வெற்றியை திமுக பெற்றிருக்க வேண்டியது.. ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது.. எனவேதான் உள்ளாட்சி தேர்தல்களில் திமுக பெரும்பான்மையான வெற்றியை பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்பினார்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அந்த வெற்றியை எட்டிப்பறிக்க முடிந்தது.. தற்போது ஆளும் கட்சி என்பதால் மட்டுமல்லாமல், இந்தமுறையும் நடக்க போகும் தேர்தலில் மாஸ் காட்ட வேண்டும் என்று திமுக மேலிடம் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது..

கொங்கு பகுதி
அதற்காகத்தான் முக்கிய மாவட்டங்களில் குறிப்பாக கொங்கு பகுதிகளில் நம்பிக்கைக்குரிய பொறுப்பாளர்களையும் முதல்வர் நியமித்தார்.. அந்த பணிகளும் ஜரூர் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. மற்றொரு பக்கம் கூட்டணி விவகாரமும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.. இந்தசமயத்தில், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.. வழக்கமாக தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவிட்டு, வாக்கு கேட்பது வழக்கம்..

ஸ்டாலின்
அந்த வகையில் தற்போதும் ஸ்டாலினின் ஒரு வீடியோவை திமுகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.. அதில், "வணக்கம்... எல்லாரும் எப்படி இருக்கீங்க.. தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... இந்த வீடியோ மூலம் சில விஷயங்களை உங்க எல்லார்கிட்டேயும் பேசணும் என்று தோன்றியது. என் மனதில் படுவதை நான் ஓப்பனாக இப்போ பேசப்போறேன். இது தமிழ் மக்களுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கிற ஒரு யுத்தம்... தமிழ்நாட்டில் நோட்டாவை விட, கம்மியாக ஓட்டு வாங்குகிற ஒரு கட்சி தமிழ்நாட்டின் உரிமைகளை மொத்தமாக பறித்துக் கொண்டு இருக்கிறது.

நேரடி கண்காணிப்பு
மாநில உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும். சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தப்பு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும். திமுக இந்து மதத்துக்கு எதிரானது என்று எதிரணியினர் ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள். அதனால் நான் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் எல்லா மத மக்களும் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்தப்படுவார்கள்.

சமத்துவம்
அவர்களின் மத நம்பிக்கைகள் மதிக்கப்படும். சமூக நீதி, சமத்துவம் பாதுகாக்கப்படும். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி தான் எனது முதன்மையான நோக்கம். எல்லா துறையும் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடை செய்யப்படும். எனது சுய நலத்துக்காக நான் யார் காலிலும் விழ மாட்டேன். எனது சுய நலத்துக்காக நான் எந்த சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், உங்களில் ஒருவனாக எப்போதும் களத்தில் வந்து நிற்பேன்.

கேள்வி எழுப்பலாம்
இதெல்லாம் எனது மனப்பூர்வமான உறுதிமொழிகள். இந்த உறுதி மொழிகளை நான் எனது உசிரா நினைத்து கடைபிடிப்பேன். இதை நான் மீறினால் நீங்க என்னை நேரடியாக கேள்வி கேட்கலாம். சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று திமுக கூட்டணிக்கு வாக்களித்த நீங்கள் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுகவுக்கும், நமது கூட்டணி கட்சிகளுக்கும் உங்கள் வாக்குகளை வழங்க வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் முதல்வர் பேசியுள்ளார்..!












Click it and Unblock the Notifications