"உங்கள் தந்தையாக கேட்கிறேன்".. மாணவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள் வைக்கிறேன். போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

போதைப் பழக்கம் என்பது, அதை பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில்லாமல், அவர்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய். தனி மனிதருடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய போதைப் பழக்கம், தற்போது மாணவர்கள் மத்தியிலும் அதிகரித்து வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

mk stalin drugs

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். போதைப்பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளின் அருகே போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையில் நான் சர்வாதிகாரி போல செயல்படுவேன் என முன்பு முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.

இந்நிலையில், இளைஞர்கள், மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

வீடியோ வாயிலாக பேசியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+