Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை அருகே தேர் திருவிழாவில் கோர விபத்து.. நேரில் சென்று பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் செல்ல உள்ளார்.

Recommended Video

    MK Stalin விளக்கம் | Thanjavur Kalimedu தேர் திருவிழா விபத்து | TN Assembly | Tamil Oneindia

    தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தன்று சித்திரை திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று காலை திருவிழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    மின் விளக்குகளை கொண்டு அலங்காரம்

    மின் விளக்குகளை கொண்டு அலங்காரம்

    மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் தொண்ட பல்லக்கு தேரில் அப்பர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இந்த தேரை திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக சென்றனர்.

    பள்ளத்தில் இறங்கிய தேர் சக்கரம்

    பள்ளத்தில் இறங்கிய தேர் சக்கரம்

    தேரில் அலங்கார மின் விளக்குகள் ஒளிர்வதற்காக வேண்டி ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தேரை அப்பர் மடத்திற்கு கொண்டு செல்வதற்காக பக்தர்கள் சாலை வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் தேரின் ராட்சத சக்கரம் இறங்கியது. அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பி தேரில் உரசியது.

    11 பேர் பலி

    11 பேர் பலி

    இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியது. தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), தந்தை அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

    மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

    அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அனைவருக்கும் உரிய சிகிச்சையை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர்

    தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர்

    இந்த விபத்து செய்தியறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தஞ்சை தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து துயரமுற்றதாக கூறி இருக்கும் அவர், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சையளிக்க ஆணையிட்ட அவர், தஞ்சாவூர் களிமேடு கிராமத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+