கவனிச்சீங்களா? “திராவிடம், ஒன்றிய அரசு, அண்ணா, கலைஞர்” - மோடி, ஆளுநர் முன் அழுத்தி சொன்ன ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு எழுதிக் கொடுத்த அறிமுக உரையில் இடம்பெற்று இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை படிக்காமல் தவறவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோரை மேடையில் வைத்துக்கொண்டே பல முறை அந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்.
சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் தொடக்கத்திலேயே அண்ணா பெயரையே உச்சரித்தார். "தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணா பெயரிலான பன்னாட்டு விமான நிலையத்தில், 1,260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, திருத்துறைப் பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை எனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சில முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்க வருகை தந்திருக்கிறார் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்." என்று குறிப்பிட்டார்.

திராவிட மாடல்: அதேபோல், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது." என்று திராவிட மாடலை சுட்டிக்காட்டினார். "நமது மாநிலப் பொருளாதாரத்தின் இரத்த நாளங்களாக விளங்கும், சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு, தமிழ்நாடு அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்!" என்று பல முறை தனது உரையில் ஒன்றிய அரசு என்றே முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
"தமிழ்நாட்டில் இயங்கி வரும் 'திராவிட மாடல்' அரசானது, எத்தனையோ சமூக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூகவளர்ச்சித் திட்டங்களோடு உட்கட்டமைப்புகளையும் சீர்செய்து வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சியின் நோக்கம் கொண்ட அரசாக இருப்பதால், அனைத்துத் துறைக்கும் சமமான அளவில் நிதிகளை ஒதுக்கி திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதற்கு துணைபுரிவதாக ஒன்றிய அரசினுடைய திட்டங்கள் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று திராவிட மாடல் அரசு என அவர் மீண்டும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அண்ணா, கருணாநிதி பெயர்கள்: அதேபோல், "ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலங்கள் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் வலியுறுத்தி வந்தார்கள். ஒரு மண்டபத்தின் மேல்பகுதியில் அனைத்து பளுவையும் வைத்துவிட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தை தாங்குவதற்காக அமைப்பது கேலிக்குரியது அல்லவா என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கேட்டார்கள்." என்று பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பெயர்களை மேற்கோள் காட்டினார்.

மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு: "மக்களுக்கு நெருக்கமானவை மாநிலங்களாக இருப்பதால் மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் இருக்கிறது. எனவே, மாநிலங்களின் நிதித் தேவைகளையும் மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் திட்டங்களை நிறைவேற்றவும் ஒன்றிய அரசினுடைய ஒத்துழைப்பு மிகமிகத் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களும் ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளீட்டை அவரும் உணர்வார் என்று நான் கருதுகிறேன்." என மாநில சுயாட்சி பற்றி பேசியதுடன் ஒன்றிய அரசு என்றே மீண்டும் மீண்டும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications