செம்ம ஆக்சன்.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள்.. ஷில்பா பிரபாகரிடம் ஒப்படைத்த முதல்வர்!
சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறைக்கு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பெறப்பட்ட 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பெறப்பபட்ட மனுக்களை ஒப்படைத்தார்..
:'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அதற்கான தனி அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎசை நியமத்து பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

5 கோப்புகளில் கையெழுத்து
சென்னை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று 5 அதிரடி அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது தேர்தல் பிரச்சாரத்தின்போது,பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாணும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த கோப்பில் கையெழுத்திட்டார்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’
இதன்படி தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறைக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்சிடம் மனுக்களை ஒப்படைத்துள்ள ஸ்டாலின் அவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி உள்ளார்.

சொன்னபடி செய்தார்
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தேன். அதன்படியே, நேற்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரிடம் இன்று மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. சொன்னதை செய்தோம் என்று கூறியுள்ளார்.

பொறுப்பான அதிகாரி
தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறைக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் 2009ம் ஆண்டு நடைபெற்ற யூ.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 46வது இடத்தை பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். இவர் வித்தியாசமாக அங்கன்வாடியில் தனது மகளை சேர்த்து அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை விதைத்தவர். மக்களின் தேவை அறிந்து செயல்படும் பொறுப்பான அதிகாரியாக பார்க்கப்படுகிறார். அதனால் தான் ஸ்டாலின் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்சிடம் மக்கள் அளித்த மனுக்களை ஒப்படைத்துள்ளாராம்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications