முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன்... சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி
முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் என்ற சுயசரிதை புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டார்.
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் என்ற சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி, கல்லூரியில் படித்த காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பு, முதல் பொதுக் கூட்ட பேச்சு, திரைத்துறையில் கால் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலம் என 1976 ஆம் ஆண்டு வரையில் 23 ஆண்டுகள் நிகழ்ந்த வாழ்க்கை பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்திற்கு உங்களில் ஒருவன் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று நடைபெறும் விழாவில் வெளியிடப்பட்டது.
விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்பி முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வரவேற்று பேசினார்.

உங்களில் ஒருவன் புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி வெளியிட்டார்.
இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள்.விழாவில் நூல் ஆசிரியரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தி பேசுகிறார்.
இந்த விழா அழைப்பிதழில் "எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம்! 1953 மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதி இருக்கிறேன்" என்று தனது கைப்பட எழுதி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications