ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்.. ஸ்மார்ட் சிட்டியில் வேலுமணி கமிஷன்.. நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்
சென்னை: "ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தி.நகர் பகுதி முழுக்க முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.. எப்போது மழை வந்தாலும் இதே பிரச்சனையைதான் அந்த பகுதி மக்கள் சந்திக்கிறார்கள்.
இதற்கு காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பான, மழைநீரை வெளியேற்ற சரிவர வசதி செய்யாததே தி.நகர் நீரில் மிதக்க காரணம் என்கிறார்கள்..

வர்த்தக பகுதி
தி.நகர் ஒரு வர்த்தக பகுதி என்பதால், அங்குள்ள கடைகளை சுற்றிலும் நீர் தளும்பி நிற்கிறது.. இதனால் கடையை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது.. இந்த 3 நாட்களாகவே கனமழை பெய்து வருவதால், திநகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது... பைக்கில் சென்றாலும், அந்த பைக்கின் உள்ளேயும் மழைநீர் சென்று மோட்டார் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

அதிமுக
இவ்வளவுக்கும் காரணம் ஸ்மார்ட்டி சிட்டி திட்டம்தான், அந்த "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்த அதிமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பி உள்ளன. பாண்டிபஜார் பகுதியில் ரூ.39.86 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய திறன்மிகு பிளாட்பாரம், சாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், முதியோர்கள் உட்கார கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டன..

கொந்தளிப்பு
இந்த திட்டத்தை துவங்கும்போதே மக்கள் கொந்தளித்தனர்.. நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் இதெல்லாம் தேவையா? என்று ஆதங்கத்துடன் கேட்டனர்... இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் அழகு தந்ததே தவிர பயன் தரவில்லை.. இதற்கு பதிலாக, பாண்டிபஜாரில் மழைநீர் வடிய வடிகால் வசதியை செய்திருந்தால் நன்றாகவே இருக்குமே என்றும் கூறப்பட்டன. இப்போது இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால், கடும் துயரத்தையும், சிக்கலையும் சந்தித்து வருவதாக தி.நகர் மக்களும், வாகன ஓட்டிகளும் புலம்பி வருகிறார்கள்.

கோரிக்கை
எனவே, தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பின்னரே மழைநீர் தேங்கும் சூழல் உள்ளது என மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. இந்நிலையில்தான், முதல்வர் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. 3வது நாளாக சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுசெய்து வருகிறார் ஸ்டாலின்.. இன்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம், செய்தியாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.

வேலுமணி
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ''தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர்.. பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது..முறையாக எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து திட்டத்திற்காக நிதி பெறும் பணிகள் நடைபெறவில்லை. எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications