தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்தது ஏமாற்றம், வேதனை: பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்தது ஏமாற்றமும் வேதனையும் தருவதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video
நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனவரி 26-ல் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி வருகிறது.

தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை
இந்த ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், ஜான்சி ராணி பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலேயருடன் போரிட்டு வீழ்த்திய வீரமங்கை வேலுநாச்சியார், மாவீரர்கள் மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் குறித்த விவரங்களுடன் தமிழக அரசு அலங்கார ஊர்தி வடிமைக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிர்ச்சி- கண்டனம்
ஆனால் இவர்களைவிட பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு பலமுறை தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் திருத்தம் செய்தது. ஆனாலும் தற்போது தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த போக்குக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி உடனே இதில் தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமி்ழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 முறை திருத்தம்
அக்கடிதத்தில் மத்திய அரசு, தமிழக அலங்கார ஊர்தியில் 7 முறை திருத்தம் செய்ய கூறியது. அப்படி திருத்தங்கள் செய்தும் அனுமதி மறுப்பது வேதனையைத் தருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை தவிர இதர மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில அரசின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications