BF.7 அச்சுறுத்தல்! தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்திற்கு விமானங்கள் மூலம் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2019 ல் கொரோனா பரவியதில் இருந்து உலக நாடுகள் பலவிதமான மாற்றங்களை அடைந்துள்ளது. பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2020 இல் உலக நாடுகளில் தீவிரமாக பரவிய கொரோனா தற்போது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் உள்ளது.
இது போன்ற இன்னல்கள் மட்டும் அல்லாது அந்தந்த நாட்டு அரசுகளும் மக்களும் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2020 இல் உலக நாடுகளில் தீவிரமாக பரவிய கொரோனா தற்போது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் உள்ளது.

வேகமாக பரவும் பிஎப். 7
இந்த நிலையில் சீனாவில் ஓமிக்ரானின் புதிய திரிபான பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவிவருகிறது. இந்த புதிய உருமாற்ற வைரஸ் பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதலை அறிகுறிகளாக கொண்டுள்ளன.

4 பேருக்கு புதிய வேரியண்ட்
இந்த வைரஸ் குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிஸாவில் ஒருவருக்கும் பரவியுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் புதிய வேரியண்ட் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுக்கின்றன. அந்த வகையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்
அது போல் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதாாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தில் பரிசோதனை
இதில் புதிய கொரோனா உருமாற்றம் தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு வேளை அந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications