பவர் ஹவுஸ்.. திமுகவில் வரப்போகும் புது பவர்புல் பதவி.. உதயநிதியின் மாஸ்டர் பிளான்.. எல்லாம் மாறுதே
சென்னை: திமுகவின் மா.செ.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதில் இளைஞர் அணி நிர்வாகிகளை நியமிக்க உதயநிதி முயற்சித்து வருகிறார். குறிப்பாக 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்பது உதயநிதியின் திட்டம். இதற்கான முயற்சியைத்தான் கடந்த பல மாதங்களாகவே எடுத்து வருகிறார்.
ஆனால், சீனியர் அமைச்சர்களின் அதிருப்தியாலும் எதிர்ப்பாலும் இந்த முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியில் உருவாக்க நினைக்கும் திட்டத்தை திமுகவில் கொண்டுவர அறிவாலயம் ஆலோசிப்பதாகத் தெரிகிறது. அதாவது, தனது கட்சியில் மா.செ.க்கள் நியமனம் குறித்து சமீபத்தில் விவாதித்தார் விஜய்.

அப்போது, 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. அல்லது 3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்கிற பேச்சுவார்த்தை நடந்தது. 2 தொகுதிகளா? 3 தொகுதிகளா? என்பதில் விவாதித்ததில் இழுபறி இருந்த நிலையில், இறுதியில் 3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என முடிவுக்கு வந்துள்ளனர். இதனைத் தாண்டி, தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு தலைவரை நியமிக்கலாம் என்றும், அந்த மண்டலத்துக்குள் வரும் மா.செ.க்கள் மண்டல தலைவருக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும், மண்டல தலைவராக அனுபவமும் திறமையும் கொண்டவர்களை நியமிக்கலாம் என்றும் விவாதித்திருக்கிறார்கள்.
இந்த முடிவினை, சுற்றுப்பயணம் துவங்குவதற்கு முன்பு அறிவித்துவிடுவார் விஜய். இந்த கட்டமைப்புக்கு சக்கரவியூகம் என பெயர் வைத்துள்ளனர். இந்த சூழலில்தான், இதனை அறிந்து கொண்ட திமுக தலைமை, திமுகவிலும் மண்டலத் தலைவர் என்கிற கான்செப்ட்டை கொண்டுவரலாமா? என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. மண்டல தலைவரா? மண்டல செயலாளரா? அல்லது மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்டது போல தென்மண்டல் அமைப்பு செயலாளர் மாதிரி மண்டல அமைப்புச் செயலாளரா? என எதனை உருவாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் 2 தொகுதிக்கு ஒரு மா.செ. எனும் திட்டத்தை எதிர்க்கும் சீனியர்களை மண்டலத்துக்கு தலைமை ஏற்கும் வகையில் நியமித்து அவர்களின் அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என்று தலைமை யோசித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
தேர்தல் ரெடி: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது
அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. திமுக சீனியர்கள் யாருக்கும் இந்த தேர்தலை நடத்துவதில் விருப்பமில்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
இது குறித்து ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தியும் வந்துள்ளனர் சீனியர்கள். அதே சமயம், மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினரோ, டிசம்பரில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என தலைமைக்கு தங்களின் விருப்பத்தை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் வகையில், ஜனவரி 1, ஏப்ரல் 1 , ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய மாதத் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு முன் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications