சிறுத்தை தாக்கி சிறுமி உட்பட 2 பேர் பலி.. தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
சென்னை: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மகள் நான்சி (3) அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவிட்டு தனது தாயுடன் வந்து கொண்டிருந்த பொழுது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.

இதே போல கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரிதா என்ற பெண்மணி உயிரிழந்தார். சிறுத்தை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் காயமடைந்த நீலகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். இந்நிலையில், சிறுத்தை தாக்குதலால் பலியானோர் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல். பகுதியைச் சேர்ந்த திருமதி. சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் ஞ்சல், எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 3) தபெ.சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின். குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications