கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம்!
சென்னை: மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தமிழ் மொழித் தொண்டைப் போற்றும் வகையில் அவரின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல், 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மூத்த தமிழறிஞரும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

மரணமடைந்த ஈரோடு தமிழன்பன் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு சென்னை அரும்பாக்கம் மின் மயானத்தில் இன்று காலை நடைபெறுகிறது. ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "செம்மொழித் தமிழின் மூத்த கவிஞரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான 'கவிஞர் ஈரோடு தமிழன்பன்' அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று சனிக்கிழமை (22.11.2025) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணாத் துயரமும் அடைந்தேன்.
காங்கேயம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிறந்து, தமிழின் சிகரங்களைத் தொட்டவர் ஈரோடு தமிழன்பன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட மகா கவிஞர் இவர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கவிஞர் சாகித்திய அகாதமி விருது பெற்றதைப் பாராட்டும் விதமாக, சென்னை அண்ணா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர்தரக் குடியிருப்பினை வழங்கி, அவர் வாழும் காலத்திலேயே அவரைப் பெருமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ எனத் தமிழ்க் கவிதையின் அனைத்து வடிவங்களிலும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்தவர். இவரது 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்காக 2004-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதுதவிர தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
கவிஞராக மட்டுமல்லாமல், சென்னைத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி, தனது கம்பீரமான குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஒரு மாபெரும் ஆளுமையை இன்று தமிழ் இலக்கிய உலகம் இழந்து தவிக்கிறது. அன்னாரது மறைவு தமிழ் மொழிக்கும், இலக்கியத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும் காங்கேயம் சட்டமன்ற உறப்பினர் என்ற வகையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மறியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர். அவரின் தமிழ் தெண்டினை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல், 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஏராளமானோர் திரண்டு பிரியாவிடை கொடுத்தனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications